பக்கம் எண் :

67

     (இ-ள்.) அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்து ஐயனே -
திருவடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரனைய திருவடியை
உடைய தலைவனே!, அருமை ...... தேவனே!, கொடிய பொலி எருதை
இருமூக்கிலும் கயிறுஒன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் -
கொடுந்தன்மையுள்ள பொலிகாளையை (அதன்) இரண்டு மூக்கிலும் ஒரு
கயிற்றைக் கோத்து வசப்படுத்துவர், குவலயந்தனில் மதக்களிறதனை
அங்குசம்கொண்டு வசவிர்த்தி கொள்வார் - உலகத்தில் மதயானைகளை
அங்குசங்கொண்டு (தாக்கி) வசப்படுத்துவர், படியில்விட அரவை மந்திர
தந்திரத்தினால் பற்றி வசவிர்த்தி கொள்வார் - உலகில் நஞ்சுடைய நாகத்தை
மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர், பாய்பரியை நெடிய
கடிவாளமது கொடு நடைபழக்கி வசவிர்த்தி கொள்வார் - தாவும் குதிரையை
நீண்ட கடிவாளத்தைக்கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர், விடம்உடைய
துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு வீசி வசவிர்த்தி கொள்வார் -
நஞ்சுடைய தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர், மிக்க
பெரியோர்களும் கோபத்தை அறிவால் விலக்கி வசவிர்த்தி கொள்வார் -
பெரிய சான்றோர்களுங்கூடத் (தம்) கோபத்தை அறிவின் திறமையினால்
நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து (மனத்தை) வசப்படுத்துவர்.

     (க-து.) எருது முதலானவற்றை வசப்படுத்த இங்குக் கூறிய முறையைக்
கையாளுதல் உலகியல்.

           43. ஒளியின் உயர்வு

செழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோ
     செய்யகச் சோதம் எனவே
  செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
     தீபத்தின் ஒளிஅ திகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
     பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப
  ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
     பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!