நான்கு
+ நிலம் - நானிலம்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், உலகம்
இந்த நால்வகையில் அடங்குவதால் நானிலம் எனப்பட்டது, நரரைச்
சுமப்போர் - பல்லக்குத் தூக்குவோர்.
(க-து.) வரவில்லாமற்
செலவு செய்வோர் யாவரினும் இழிந்த வீணர்.
57.
கெடுவன
மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,
மூதரண் இலாத நகரும்,
மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை
மோனையில் லாத கவியும்
காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல
கரையிலா நிறையே ரியும்,
கசடறக் கற்காத வித்தையும், உபதேச
காரணன் இலாத தெளிவும்,
கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத
கோதையர்செய் கூத்தாட் டமும்,
குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று
கோடுயர்ந் தோங்கு தருவும்,
ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஐயனே
- தலைவனே!, அருமை ........ தேவனே!, மூப்பு
ஒருவர் இல்லாத குமரி குடிவாழ்க்கையும் - முதியவர் ஒருவர் இல்லாத
கன்னியின் இல்வாழ்க்கையும், மூதரண் இலாத நகரும் - பழைமையான
காவல் இல்லாத பட்டினமும், மொழியும் வெகுநாயகர் சேர்இடமும் -
கூறப்பட்ட பல அதிகாரிகள் கூடும் இடமும், வரும் எதுகைமோனை
இல்லாத கவியும் - (இலக்கணத்தில்) வரும் |