மெய்யாநின்
அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பிவழி படவேண் டுமோ?
வேதியர் தமைப்பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச் சனைசெய் வரோ?
ஐயா றுடன்கமலை சோணா சலந்தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஐயாறுடன்
கமலை சோணாசலம் தில்லை அதிபனே -
திருவையாறு, திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின்
தலைவனே!, அருமை ...... தேவனே!, பொய்யாத வாய்மையும் சீலமும்
சார்ந்து உளோர் பூவலம்செய வேண்டுமோ - அழியாத உண்மையும்
ஒழுக்கமும் உடையவர்கள் உலகை வலம் வரல்வேண்டுமோ?, பொல்லாத
கொலைகளவு இலாத நன்னெறி உளோர் புகழ்அறம் செயவேண்டுமோ -
தீய கொலையும் களவும் அற்ற நல்லொழுக்கமுடையவர் புகழத்தக்க
அறங்களைச் செய்தல் வேண்டுமோ?, நையாத காமத்தை லோபத்தை
விட்டபேர் நல்லறம் செயவேண்டுமோ - மெலியாத ஆசையையும்
ஈயாமையையும் விட்டவர்கள் வேறு நல்ல அறத்தை நாடல்வேண்டுமோ?,
நல் மனோ சுத்தி உண்டானபேர் மேலும் ஒரு நதிபடிந் திடவேண்டுமோ -
நல்ல உளத்தூய்மை பெற்றவர்கள் வேறாக ஒரு தூய ஆற்றில் முழுகுதல்
வேண்டுமோ?, நின் அடியரை மெய்யா(க) பரவுவோர் உன்பதம் விரும்பி
வழிபட வேண்டுமோ - உன் தொண்டரை உண்மையாக வணங்குவோர் நின்
திருவடியைப்
போற்றுதலும் வேண்டுமோ?, வேதியர் தமைப்பூசை
பண்ணுவோர் வானவரை வேண்டி அர்ச்சனை செய்வரோ - மறையவரை
வணங்குவோர் வானவரை விரும்பி மலரிட்டு வழிபடல் வேண்டுமோ?
(வி-ரை.)
பூவலம்
செய்வதால் உண்டாகும் நற்பண்புகள் இயல்பாகக்
கைவரப்பெற்றோர் மேலும் பூவலம் செய்தல்
|