பக்கம் எண் :

10குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

60.
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
61.
ஒத்த புவனத் துருவே யுரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
62.
கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
63.
அண்ட முருவாகி யங்கஞ் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
64.
ஆவிப் புலனுக் கறிவளிப்ப வைந்தொழிலும்
ஏவித் தனிநடத்து மெங்கோவே - மேவ
65.
வருமட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தருமட்ட யோகத் தவமே - பருவத்
66.
தகலாத பேரன் படைந்தோ ரகத்துட்
புகலாகு மின்பப் பொருப்பும் - சுகலளிதப்

    60. மந்திரம் - மந்தராத்துவா. சோரி - இரத்தம். வான் - பெருமை. பதம்பதாத்துவா. தொந்தம் - கட்டு. வன்னம் - வர்ணாத்துவா. தொக்கு - தோல். பந்தனை - பாசம்.

    61. புவனம் - புவனத்துவா. தததுவங்கள் - தததுவாத்துவா சத்ததாது - எழுவகைத் தாதுக்கள்; சேரியும் தொக்குமாகிய இரண்டு தாதுக்களை முன்னே கூறினமையின், இங்கே அவையொழிந்த ஐந்தையே கொள்க.

    62. கலை - கலாத்துவா.

    63. அங்கம் - உறுப்பு. சத்திமூன்று; 9-10, குறிப்பைப் பார்க்க. உட்கரணம் - அந்தக்கரணம்; “இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரணமாக” (சிவ. சித்தி. சூ. 5:7.) (பி.ம்) ‘மூன்று கரணமாய்’

    60-63. இங்கே கூறப்பட்ட அத்துவா வடிவத்தைச் சிவபெருமானுக்குரிய உபசாரத் திருமேனி யென்பர் (சிவ. சித்தி. சூ. 1:56, சிவஞான.)

    63-64. “அலகிலா வுயிர்ப்பு லன்பட் பறிவினை யாக்கி யைந்து, நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்” (சிவ. சித்தி. சூ. 6:7)

    65. அட்டமூர்த்தம் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமான்னென்பன. அட்டயோகம் - இயமம் முதலிய எட்டு அங்கங்களையுடைய யோகம்.

    66. இதுமுதல் தசாங்கம கூறப்படும். இன்பப் பொருப்பு - ஆனந்தமலை. லளிதம் - அழகு.