பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா11

67.
பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்குந் திருநாடும் - பாரின்பம்
68.
எல்லாங் கடந்த விருநிலத்துட் போக்குவர
வல்லா துயர்ந்த வணிநகரும் - தொல்லுலகில்
69.
ஈறு முதலுமகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக்
கூறி நடாத்துங் குரகதமும் - ஏறுமதம்
70.
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ
71.
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
72.
ஐந்தொழிலு மோவா தளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும்
73.
நீக்கமின்றி யாட நிழலசைப்பான் போற்புவனம்
ஆக்கி யசைத்தருளு மாணையும் - தேக்கமழ்ந்து

    67. இன்பவெள்ளப் பெருக்காறு: ‘ஆனந்தங் காணுடையானாறு’ என்பது திருவாசகம். மீதானம் - மேலான இடம்.

    68. போக்கு வரவல்லாதுயர்ந்த அணிநகரென்றது பரானந்த முத்தியை; “போக்கு வரவும் ...........கடந்துலவா வின்பம்” என்றார் முன்னும்; 29.

    69. குரகதம் - குதிரை, மதம் - சமயம்; யானைக்குரிய மதமென்பது மற்றொரு பொருள்.

    70. துதிக்கையினால் - தோத்திரம் செய்வதனால்; தும்பிக்கை யினாலென்பது மற்றொரு பொருள். பஞ்சமலம் - ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. கடாக்களிறு - மதயானை, சிவஞானக்கடாக்களிறு: “ஞான வாரணம்” (566.); “சிவசமயத்திரு ஞான வேழமே” (திருவகுப்பு.)

    71. போதம் - அறிவு, நார் - அன்பு; மாலைகட்டுதற்குரிய நாரென்பது மற்றொரு பொருள்: “பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே” (மீனாட்சியம்மை யிரட்டைமணிமாலை); “தொழுதகன்ற வன்பெருநார் தொடுத்தலங்கல் சூட்ட” (திருவிளை.)

    72. வான் கொடி - பெருமையையுடையகொடி, நவநாதம் - புதுமைதரும் நாத தத்துவம், நாதமுரசு: “பருமித்த நாதப் பறை” (திருவா.)

    73.ஆடி - கண்ணாடி, தான் ஆடி, கண்ணாடியில் நிழலை அசையச் செய்பவன்போல். புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணை: “தன்வலி