74. | வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே | | பேசுந் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் | 75. | பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப் | | பாங்குறையு முக்கட் பரஞ்சோதி - ஆங்கொருநாள் | 76. | வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி | | ஐந்து முகத்தோ டதோமுகமும் - தந்து | 77. | திருமுகங்க ளாறாகிச் செந்தழற்க ணாறும் | | ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப - விரிபுவனம் | 78. | எங்கும் பரக்க விமையோர்கண் டஞ்சுதலும் | | பொங்குந் தழற்பிழம்பைப் பொறகரத்தால் - அங்கண் | 79. | எடுத்தமைத்து வாயுவைகொண்டேகுதியென் றெம்மான் | | கொடுத்தளிப்ப மெல்லக்கொடுபோய் - அடுத்ததொரு | 80. | பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள் | | சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற் |
யாணை தாங்கி, மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில் செய்ய” (திருவிளை.) தேக்கமழ்ந்து - இனிமை பொருந்தி; தெய்வத்தன்மை பொருந்தியென்றலும் ஆம்.
74. பனுவல் - நூல். விபுதர் - புலவர். தேசு - தேஜஸ் என்ற வட சொல்லின் சிதைவு.
75. இது முதல் முருகக் கடவுளின் திருவதாரம் கூறப்படும்.
கோதை இடப் பாங்கு உறையும் - உமாதேவியார் தம்முடைய வாமபாகத்திலே வீற்றிருக்கப்பெற்ற.
76. தகுவர் - அசுரர்கள். முறை - முறையீடு. ஐந்துமுகம் - ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம். அதோ முகம் - கீழ் நோக்கிய முகம்.
76-7. இக்கண்ணிகளிற் கூறப்பட்ட செய்தியை, “வந்திக்கு மலரோனாதி வானவ ருரைத்தல் கேளாப், புந்திக்கு ளிடர்செய்யற்க புதல்வனைத் தருது மென்னா, அந்திக்கு நிகர்மெய் யண்ணலருள் புரிந்தறிஞ ராயோர், சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுக மாறுங் கொண்டான்”, “.......................... சிற்பரன் றான்கொண்டுள்ள திருமுக மாறுந் தம்மிற், பொற்புறு நூதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான்” (கந்த. திருவவதாரப் படலம், 43-4) என்னும் செய்யுட்களால் அறியலாம்.
78. பிழம்பு - திரட்சி.
80. என - என்று வாயு கூற. தீக்கடவுள் - அக்கனிதேவன். பகீரதி = பாகீரதி - கங்கையாறு. போது ஒரு சற்று - சிறிது நேரம்.
|