81. | றன்னவளுங் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் | | சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய் - முன்னர் | 82. | அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி | | நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவற் | 83. | கன்னியோடுஞ் சென்றவட்குக் காதலுருக் காட்டுதலும் | | அன்னவள்கண் டவ்வுருவ மாறினையும் - தன்னிரண்டு | 84. | கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து | | மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் - செய்ய | 85. | முகத்தி லணைத்துச்சி மோந்து முலைப்பால் | | அகத்துண் மகழ்பூத் தளித்துச் - சகத்தளந்த | 86. | வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித் | | துள்ள முவப்ப வுயர்ந்தோனே - கிள்ளைமொழி | 87. | மங்கை சிலம்பின் மணியொன் பதிற்றோன்றும் | | துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் |
81. ஆற்றாள் - வன்மையற்றவளாகி. சரவணம் - சரவணப் பொய்கை; சரவணம் = சரவனம் - நாணற்காடு. முன்னர் - முதலில்.
81-2. அறுமீன் - கார்த்திகை மாதர் அறுவர். பின்பு உமாதேவியார் அளித்த பாலையும் உண்டமையால் இங்கே, ‘முன்னர், அறுமீன் முலையுண்டு’ என்றார். அறுமீன் முலையுண்டழுது: “அறுவர் கொங்கை, விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும், குருந்தை” (கந்தரலங்காரம்.) நறுநீர் - கங்கை. நாதன் - சிவபெருமான். குறுமுறுவல் - புன்சிரிப்பு.
83. கன்னி - உமாதேவியார். காதல் உரு - திருமகனுடைய திருவுருவத்தை; காதல் - பிள்ளை.
83-4. கந்தன் - சேர்க்கப்பட்டவன்; “அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக், கந்த னென்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்”, “சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீயொன்றாச் செய்தாய், ஆயதனாலே கந்த னாமெனு நாமம் பெற்றான்” (கந்த. சரவணப். 21, திருவிளை. 17); “ஆறுமோ ருருவதாக வாக்கலிற் கந்த னானான்” (தணிகைப். சீபரி. 29.)
85. முலைப்பாலை அளித்தது.
85-6. சகத்தளந்த வெள்ளைவிடை - உலகத்தை அளந்த திருமாலாகிய வெண்மையையுடைய இடப வாகனம்.
87. இதுமுதல் முருகக் கடவுளின் திருவிளையாடல்கள் கூறப்படும்.
மங்கை - உமாதேவியார். மணி ஒன்பது - நவரத்தினங்கள், மடவார் - நவசக்திகள். அவர்களாவர்: (1) மாணிக்கவல்லி (2) மேளத்திகவல்லி
|