பக்கம் எண் :

14குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

88.
விருப்பா லளித்தநவ வீரருக்குண் முன்னோன்
மருப்பாயுந் தார்வீர வாகு - நெருப்பிலுதித்
89.
தங்கட் புவன மனைத்து மழிததுலவும்
செங்கட் கிடாயதனைச் சென்றுகொணர்ந் - தெங்கோன்
90.
விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந்தெண் டிக்கும்
நடத்தி விளையாடு நாதா - படைப்போன்
91.
அகந்தை யுரைப்பமறை யாதி யெழுத்தென்
றுகந்த பிரணவத்தி னுண்மை - புகன்றிலையால்
92.
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங னென்றுமுனம்
குட்டிச் சிறையிருத்துங் கோமானே - மட்டவிழும்
93.
பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரம மொழிந்தோனே - கொன்னெடுவேற்

(3) புட்பராகவல்லி (4) கோமேதகவல்லி (5) வைடூரியவல்லி (6) வைரவல்லி (7) மரகதவல்லி (8) பவளவல்லி (9) இந்திரநீலவல்லி யென்பார்.

    88. நவவீரர் - வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்போர் மரு பாயும் தார் - மணம் பரவிய மார்பின் மாலையையுடைய; தார் - மார்பின் மாலை, நெருப்பில் - நாரதமுனிவர் வேட்ட வேள்வித்தீயில்.

    89. கிடாய் - ஆட்டுக்கிடாய்; “நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக்கிடாய்” (அகநானூறு, 156 : 14) எம் கோன் - எம்முடைய தலைவனே.

    90. விடுக்குதி - செலுத்தியருள்வாயாக. படைப்போன் - பிரமதேவன்.

    91, (பி-ம்), ‘ஆதியெழுத்தாம்’

    92. சிட்டி = ஸ்ருஷ்டி - படைப்பு; ”சிட்டி செய்வதித்தன்மைய தோவெனாச் செவ்வேள், குட்டி னானய னான்குமா முடிகளுங் குலுங்க” (கந்த. அயனைச். 14.) மட்டு - தேன்.

    93. பொன் அம் கடுக்கை - பொன் போன்ற அழகிய கொன்றை மலரை அணிந்த. போற்று இசைப்ப - துதி கூற. பிரமம் - பிரணவப் பொருளை; “ஓமெனு மெழுத்திற் பிரமம் - பேசிய, நான்மறை விதியை” (கல். கடவுள் வாழ்த்து, 2.) கொல் நெடு வேல் - கொல்லுதற்குக் காரணமாகிய நெடிய வேற்படையையுடைய; கொல் - கொற்றொழிலுமாம்; கொன்னுனை வேலம் பலவன்” (திருச்சிற், 231.); கொன் - பகைவர்க்கு அச்சத்தைத் தருமென்பதுமாம்.