54. | கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த | | அம்பொன் மணிப்பூ ணகன்மார்பும் - பைம்பொற் | 55. | புரிநூலுங் கண்டிகையும் பூம்பட் டுடையும் | | அரைஞாணுங் கச்சை யழகும் - திருவரையும் | 56. | நாதக் கழலு நகுமணிப்பொற் கிண்கிணியும் | | பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி | 57. | இளம்பருதி நூறா யிரங்கோடி போல | | வளந்தருதெய் வீக வடிவும் - உளந்தனிற்கண் | 58. | டாதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின் | | மீதிருக்குந் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந் | 59. | தோங்காரத் துள்ளொளிக்கு முள்ளொளியா யைந்தொழிற்கும் | | நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய |
கடாவ வொருகை யிருகை, ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை, மார்பொடு விளங்க வொருகை, தாரொடு பொலிய வொருகை, கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை, பாடின் படுமணியிரட்ட வொருகை, நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொரு கை, வானர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்கப், பன்னிரு கையும் பாற்பட வியற்றி” (முருகு. 107 - 108) என்பதை்த் தழுவிக் கூறப்பட்டன.
55.புரிநூல் - பூணூல். கண்டிகை - உருத்திராக்க மாலை. பூம்பட்டு - பூந்தொழில் அமைந்த பட்டு. கச்சை - அரைக்கச்சை; “கச்சைத் திருவரையும்” என்பர் பின்; 114-5.
56. நாதக்கழல் - நாத தத்துவமாகிய கழல்; ஒலியைச் செய்யும் கழலெனினுமாம். நகு - விளங்குகின்ற. பரிபுரம் - சிலம்பு.
57. இளம்பருதி - உதயசூரியன். தெய்வீக வடிவு: “தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்” (முருகு. 287.) இளம்பருதி......வடிவு: “விண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர் விரியு மிளஞ் சுடரே” (377); “உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கு” (முருகு. 1-2); “சதகோடி சூரியர்களுதயமென .... ஒருசோதி வீசுவதும்” (திருவகுப்பு.)
58. ஆதரிப்போர் - அன்பு செய்வோர், அகத்தாமரை - இதயகமலம்.
58-59. ஐந்து ஓங்காரம் - அகாரம், உகாரம்,பறை"(திருவா,) மகாரம், நாதம், விந்து, ஓங்காரத் துள்ளொளிக்கு முள்ளொளியாய்; “ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருக னுருவங்கண்டு” (கந்தரலங்காரம்.) ஐந்தொழில் - படைப்பு முதலியன.
|