| விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது | | வெள்ளநீ ராடியருளே | | விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி | | |
86. | பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் றிருமேனி | | பாசொளி விரிப்பவந்தண் | | பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்ப் | | பருமுத்த மரபதமதாய்த் |
| தண்ணாறு மல்லற் றுறைச்சிறை யனங்களி | | தழைக்குங் கலாமஞ்ஞையாய்ச் | | சகலமு நின்றிருச் சொருபமென் றோலிடும் | | சதுர்மறைப் பொருள்வெளியிடக் |
| கண்ணாறு குழலியர் குடக்கொங்கை பொங்குசெங் | | களபமுங் கத்தூரியும் | | கப்புரமு மொக்கக் கரைத்தோடி வாணியும் | | காளிந்தி யுங்கங்கையாம் |
| விண்ணாறு மளவலாய் விளையாடு புதுவைகை | | வெள்ளநீ ராடியருளே | | விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி | | |
(4) வேகவதி - வைகையாறு.
86. (அடி, 1-2) அம்பிகையினது திருமேனியின் மரகதச் சோதியால் எல்லாப் பொருள்களும் பச்சைநிறம் பெற்றன வென்பர்.
பாசொளி - பச்சை ஒளி. (பி-ம்.) ‘பாசொளி பரப்ப.’ பவளக் கொடி நீராடுந் துறையிலுள்ளது. கலாமஞ்ஞை:7. தேவியின் பச்சையொளியால் யாவும் பசிய நிறம் அடைதல் (தக்க. 166.) ‘ஸர்வம் சக்தி மயம்’ என்பது வேதத்தின் கூற்றென்பர்; “அனைத்துந்தன் மயமெனுஞ் சுருதிகரி யாவைத்தும்” (361); தக்க. 116, உரையையும், விசேடக் குறிப்பையும் பார்க்க.
(3-4) குடம் போன்ற கொங்கை. செங்களபம் - செஞ்சந்தனக் குழம்பு. கத்தூரி கருநிறமுடையது. கப்புரம் - பச்சைக் கருப்பூரம்; “கப்புரப் பசுந்திரை”. (சீவக. 197.) வாணி - சரஸ்வதி நதி; இது செந்நிறமுடையது. காளிந்தி - யமுனை; இது கருநிறமுடையது. கங்கை வெண்ணிறமுடையது. அளவலாய் - கலந்ததை ஒத்து. (பி.ம்.) ‘அளவலாய்’. வைகை செஞ்சந்தனக்குழம்பால் வாணி நதியையும். கத்தூரியால் யமுனை
|