87. | தூங்குசிறை யறுகா லுறங்குகுழ னின்றுணைத் | | தோழியர்கண் மேற்குங்குமம் | | தோயும் பனித்துறைச் சிவிறிவீ சக்குறுந் | | துளியெம் மருங்குமோடி |
| வாங்குமலை வில்லியார் விண்ணுரு நனைத்தவர் | | வனைந்திடு திகம்பரஞ்செவ் | | வண்ணமாச் செய்வதச் செவ்வான வண்ணரொடு | | மஞ்சள்விளை யாடலேய்ப்பத் |
| தேங்குமலை யருவிநெடு நீத்தத்து மாசுணத் | | திரள்புறஞ் சுற்றியிருப்பச் | | சினவேழ மொன்றொரு சுழிச்சுழல்வ மந்தரம் | | திரைகடன் மதித்தன்மானும் |
| வீங்குபுனல் வைகைத் தடந்துறை குடைந்துபுது | | வெள்ளநீ ராடியருளே | | விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி | | |
88. | துளிக்கும் பனித்திவலை சிதறக் குடைந்தாடு | | துறையிற் றுறைத்தமிழொடும் | | தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி யெனுந்துணைத் | | தோழிமூழ் கிப்புனன்மடுத் |
யையும், பச்சைக் கருப்புரத்தால் கங்கையையும் ஒத்தது. புது வைகை; புதுமை நீருக்கு அடை. (பி - ம்.) ‘வைகைபுது வெள்ள நீர்’.
87. (அடி, 1) தூங்கு சிறை - செறிந்த சிறகுகள்; “தூங்கிருள்” (சீவக. 310). அறுகால் - வண்டு. குழல் - குழலையுடைய நீ. குங்குமம் - குங்குமம் கலந்த நீரை; பெருங் 1.41; 17 -18. துறையிற் சிவிறியால் வீச; சிவிறி - நெடுந்துருத்தியென்னும் நீர் வீசு கருவி.
(2) மலை வில்லியார் - சிவபெருமான். விண்ணுரு - ஆகாயமாகிய திருவுருவம் (81, 83, 89) திகம்பரம் = திக் அம்பரம் - திசையாகிய ஆடை. அது நனைதலாவது வெளி முழுவதும் நீர்த்துளி செறிதல். மஞ்சள் விளையாடல் - திருமணக் காலத்தில் ஒருவர்மேல் ஒருவர் மஞ்சள் நீரை வீசி விளையாடுதல்.
(3) (பி.ம்.) ‘மழையருவி’ மாசுகணம் - பெரும்பாம்பு. ஒரு சுழிச் ச்ழல்வ - ஒரு சுழியின்கண் சுழலுதல். (பி - ம்.) ‘சுழிச்சுழலன்’ யானைக்கு மந்தரமலை உவமை.
88. (அடி, 1) துறைத் தமிழ்; 62. கலைக் கொடி - கலைமகள். புனல் மடுத்து - நீரிற் புகுந்து.
|