| தொளிக்கும் பதத்துமற் றவளென வனப்பெடையை | | ஓடிப் பிடித்தம்மை | | ஒண்பரி புரத்தொனியு மடநடையும் வௌவின | | துணர்ந்துபின் றொடர்வதேய்ப்ப |
| நெளிக்குந் தரங்கப் பெருங்கங்கை யுடனொட்டி | | நித்திலப் பந்தாடவும் | | நிரைமணித் திரளின் கழங்காட வுந்தன் | | நெடுந்திரைக் கையெடுத்து |
| விளிக்கும் பெருந்தண் டுறைக்கடவுள் வைகைநெடு | | வெள்ளநீ ராடியருளே | | விடைக்கொடி யவரக்கொரு கயற்கொடி கொடுத்தகொடி | | |
வேறு 89. | துங்க முலைப்பொற் குடங்கொண்டு | | தூநீர் நீந்தி விளையாடும் | | துணைச்சே டியர்கண் மேற்பசும்பொற் | | சுண்ண மெறிய வறச்சேந்த |
| அங்கண் விசும்பி னின்குழற்காட் | | டறுகாற் சுரும்ப ரெழுந்தார்ப்ப | | தையன் றிருமே னியிலம்மை | | அருட்கட் சுரும்பார்த் தெழன்மானச் |
(2) பதத்து - சமயத்தில். மற்று; அசைநிலை. அவளென - அக்கலைமகளென்று எண்ணி. அனப்பெடையைப் பிடித்து: பிடிப்பவள் அம்பிகை. (பி - ம்.) ‘அனப்பேடை யோடிப். பரிபுரத்தொனி - சிலம்பொலி. அன்னத்தின் ஒலி அம்பிகையின் சிலம்பொலிக்கும், அதன் நடை அவள் நடைக்கும் உவமை (53.)
(3) (பி -ம்.) ‘தரங்கத் தடங்கங்கை’. ஒட்டி - பந்தயம் கூறி. திரையாகிய கை.
(3 -4) கங்கையை விளிக்கும்.
89. (அடி, 1) நகிலாகிய குடம். குடத்தைத் தழுவிக் கொண்டு நீந்துதல் வழக்கம் (100.) எறிய - அநம்பிகை எறிய. அறச் சேந்த - முற்றும் சிவந்த.
(2) ஐயன் திருமேனி - ஆகாயம் (81, 83, 87.)
|