| செங்க ணிளைஞர் களிக்காமத் | | தீமூண் டிடக்கண் டிளமகளிர் | | செழுமென் குழற்கூட் டகிற்புகையாற் | | றிரள்காய்க் கதலி பழுத்துநறை |
| பொங்கு மதுரைப் பெருமாட்டி | | புதுநீ ராடி யருளுகவே | | பொருநைத் துறைவன் பொற்பாவாய் | | |
90. | இழியும் புன்றறண் டுறைமுன்றில் | | இதுவெம் பெருமான் மண்சுமந்த | | இடமென் றலர்வெண் கமலப்பெண் | | இசைப்பக் கசிந்துள் ளுருகியிரு |
| விழியுஞ் சிவப்ப வானந்த | | வெள்ளம் பொழிந்து நின்றனையால் | | மீண்டும் பெருக விடுத்தவற்கோர் | | வேலை யிடுதன் மிகையன்றே |
| பிழியு நறைக்கற் பகமலர்ந்த | | பிரச மலர்ப்பூந் துகண்மூழ்கும் | | பிறைக்கோட் டயிரா பதங்கூந்தற் | | பிடியோ டாடத் தேனருவி |
(3) காய்க் கதலி - கதலிக்காய். வாழைக்காயைப் புகையூட்டிப் பழுக்கவைத்தல் வழக்கம;் இது போன்ற பல விஷயங்கள் ‘உத்பலபரி மளம்’ என்னும் வடநூலிற் கூறப்பட்டுள்ளன என்பர். நறை - தேன்.
(4) பொருநை - தாமிரபன்னி.
90. (அடி, 1) துறைமுன்றில் இது - துறைப்பரப்பாகிய இது. வெண் கமலப் பெண் - கலைமகள். இசைப்ப - நினக்குச் சொல்ல.
(2) ஆனந்த வெள்ளம் - உவகைக் கண்ணீர்ப் பெருக்கு - மீண்டும் பெருக விடுத்து - மறுபடியும் நின் கண்ணீரால் வையை நதி பெருகும்படி செய்து. அவற்கு - சோமசுந்தரக் கடவுளுக்கு. ஓர் வேலை யென்றது மண்சுமத்தலை; வேலை - தொழில் (69) மிகையன்றே - மிகையல்லவா.
3)(பி-ம்.) ‘அயிராவதங்’. துகளில் மூழ்கிய யானை அது போக அருவியாடுதல் இயல்பு.
|