| விளையாடு வைகைத் தடந்துறை குடைந்துபுது | | வெள்ளநீ ராடியருளே | | விடைக்கொடி யவர்க்கொரு கயற்கொடி கொடுத்தகொடி | | |
85. | திரைபொங் கிடுஞ்செங்கை வெள்வளை கலிப்பநகை | | நிலவுவிரி பவளம்வெளிற | | நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவறல் | | நெறிகுழற் கற்றைசரியத் |
| திரைபொங்கு தண்ணந் துறைக்குடைந் தாடுவ | | செழுந்தரங் க்ககங்கைநுண் | | சிறுதிவலை யாப்பொங்கு மானந்த மாக்கடல் | | திளைத்தாடு கின்றதேய்ப்பக்ச |
| கரைபொங்கு மறிதிரைக் கையாற் றடம்பணைக் | | கழனியிற் கன்னியர்முலைக் | | களபக் குழம்பைக் கரைத்துவிட் டள்ளற் | | கருஞ்சேறு செஞ்சேறதாய் |
(4) சிவபெருமான் சுந்தர பாண்டியராகிய பொழுது அம்பிகை தன் அரசையும் கயற்கொடியையும் அவருக்கு அளித்தனள்.
85. நீராடுதலால் அம்பிகையின் உறுப்புக்களில் உண்டாகும் வேறுபாடுகள் கூறப்படும்.
(அடி, 1) கலிப்ப - ஒலிக்க. பவளம் - வாயிதழ். நீலக் கருங்குவளை செங்குவளை பூப்ப - கரிய கண்கள் செந்நிறத்தையடைய. அறல் - கருமணல்.
(2) ஆடுவ - ஆடுதல். சிவபிரானது அளவை நோக்குகையில் கங்கை சிறு திவலையாகு மென்க. ஆனந்த மாக்கடல் - சிவபெருமான். அவர் திருச்சடையில் கங்கை ஒரு திவலைபோல் அடங்கியதாதலின் இங்ஙனம் கூறினார்; “புன்னு னித்தரு பனியென வரந்தி புனிதர, சென்னியிற்கரந் தொளித்தலும்” ( கம்ப. அகலிகைப் 56.) (பி-ம்.) ‘சிறுதுவலை.’
(1-2) அம்பிகை வையைத் துறையில் ஆடுதலால் உண்டான வேறுபாடுகள் சிவபெருமானோடு அளவளாவுங் காலத்து உண்டாவனவற்றை ஒத்தன; “செய்ய வாய்வெளுப் பக்கண் சிவப்புற, நெற்ற ராக மழியத் துகினெகத், தொய்யின் மாமுலை மங்கையர் தோய்தலால், பொய்கை காதற்கொழுநரும் போன்றதே” ( கம்ப, நீர்விளையாத்துப். 19.) நதித் துறையில் ஆடுதல் கடலில் ஆடியதை ஒத்ததென்றது ஒரு நயம்.
(3) பணையாகிய கழனி.
|