| அள்ளல் வயற்றுயின் மதுரைத் துரைமகள் | | ஆடுக வம்மனையே | | அழகு தழைந்தகல் யாண சவுந்தரி | | |
9. நீராடற் பருவம்
ஆசிரிய விருத்தம் 84. | வளையாடு வண்கைப் பொலன்சங் கொடும்பொங்கு | | மறிதிரைச் சங்கோலிட | | மதரரிக் கட்கயல் வரிக்கய லொடும்புரள | | மகரந்த முண்டுவண்டின் |
| கிளையாடு நின்றிருக் கேசபா ரத்தினொடு | | கிளரைசைவ லக்கொத்தெழக் | | கிடையாத புதுவிருந் தெதிர்கொண்டு த்ததமிற் | | கேளிர்க டழீஇக்கொண்டெனத் |
| தளையாடு கறையடிச் சிறுகட் பெருங்கைத் | | தடங்களி றெடுத்துமத்தத் | | தவளக் களற்றினொடு முட்டவிட் டெட்டுமத | | தந்தியும் பந்தடித்து |
பேசுதற்கு. விடுப்ப - விடுத்தல். (பி-ம்.) 'முறை முறையா' 'பேசி விடுப்ப’. அம்பிகை அம்மனை யாடுதல் தூது பேச விடுப்பதை யொத்தது.
(4) அள்ளல் - சேறு. துரைமகள் - அரசி.
(முடிபு.) பேச விடுப்ப கடுப்ப ஆடியருள் என்க.
84. (அடி, 1) வளை - கையிலுள்ள சங்கரேகை. பொலன் சங்கு - பொன் வளையல். ஓலிட - முழங்கு. கட்கயல் - கண்ணாகிய கயல். வரிக்கயல்; நீரில் உள்ளது. மகரந்தம் - தேன்.
(2) கேசபாரம் - கூந்தற் றொகுதியாகிய சுமை. (பி-ம்.) ‘கேசபாசம்’. சைவலக்கொத்து - கொடிப்பாசியின் தொகுதி. கேளிர்கள் - உறவினர்.
(3) தளை - சங்கிலி. கறை அடி - உரல் போன்ற டி. (பி-ம்.) ‘மற்றத் தவளக்களிற்றோனொடு.’ தவளக்களிறு - ஐராவதம். எட்டு மததந்தி - அட்ட திக்கயங்கள்.
|