| கம்மனை யாயவர் தம்மனை யானவள் | | ஆடுக வம்மனையே | | அழகு தழைந்தகல் யாண சவுந்தரி | | |
83. | ஒள்ளொளி மரகத மும்முழு நீலமும் | | ஒண்டர ளத்திரளும் | | ஒழுகொளி பொங்க விழைத்திடு மம்மனை | | ஒருமூன் றடைவிலெடாக் |
| கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ | | கண்ணுதல் பாற்செல நின் | | கையில் வளர்த்த பசுங்கிளி யுன்வளர் | | காமர் கருங்குயிலும் |
| பிள்ளைவெ ளோதிம மும்முறை முறையாற் | | பெருகிய காதலைமேற் | | பேச விடுப்ப கடுப்ப வணைத்தொரு | | பெடையோ டரசவனம் |
(3-4) தனிமுதல் யாமென்பார் - சிவபிரான். அம்மனை - தாய். சத்திதத்துவத்தினின்றும் சதாசிவத்ததுவம் தோன்றுதலின் அம்பிகையைச் சிவபிரானுக்குத் தாயாகக் கூறினார்; “கனக மார் கவின்செய்மன்றில், அனக நாட கற்கெம் மன்னை, மனிவிதாய் தங்கை மகள்” (513); “இமவான் மகட்குத், தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன்” (திருவா. திருப்பொற். 13); “தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ண றன்னொருபால், அவளத்த னாமகனாந்தில்லையான்” (திருச்சிற்.112); “சத்தி யீன்ற சதாசிவம்” (திருமந்திரமாலை); “சத்திதான் சிவத்தை யீன்றும்” (சிவஞா. சித்தி.) அம்மனையாய்ப் பின் அவர் தம்மனை ஆனவள்; தம்மனை - மனைவி; “மம்னை தம்மனையா” (633.)
83. மரகதம், நீலம், முத்து என்பவற்றாலாகிய அம்மனைகளை அம்பிகை வானில் வீசி ஆடுதல் சிவபெருமானிடத்துக் கிளியையும் குயிலையும் அன்னத்தையும் தூதுவிடுப்பதை ஒக்குமென்பர்.
(அடி, 1) ஒள்ளொளி - மிக்க ஒளி. அடைவில் - முறையாக. எடா - எடுத்து.
(2) கோதையாகிய நீ. விசும்பு இறைவன் திருமேனியாதலின் அங்கே வீசும் அம்மனைகள் அவன்பால் தூது செல்வன போன்றன.
(1-3) மரகத அம்மனைக்குக் கிளியும், நீலமணியாலாகிய அம்மனைக்குக் குயிலும், முத்தாலாகிய அம்மனைக்கு அன்னமும் உவமைகள். பேச
|