| வளரொளி விம்மிய வம்மனை செல்வது | | வானவிலொத் திடவும் | | மனனெக் குருகப் பரமா னந்த | | மடுத்த திருத்தொண்டர்க் |
| களிகனி யத்திரு வருள்கனி யுங்கனி | | ஆடுக வம்மனையே | | அழகு தழைந்தகல் யாண சவுந்தரி | | |
82. | கைம்மல ரிற்கொலி கதிர்முத் தம்மனை | | நகைமுத் தொளிதோயக் | | கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக் | | கமலச் சுடர்கதுவச் |
| செம்மணி யிற்செய் திழைத்தன வெனவும் | | சிற்சிலர் கட்கடையின் | | செவ்வியை வவ்விய பின்கரு மணியிற் | | செய்தென கொல்லெனவும் |
| தம்மன மொப்ப வுரைப்பன மற்றைச் | | சமயத் தமைவுபெறார் | | தத்தமி னின்று பிதற்றுவ பொருவத் | | தனிமுதல் யாமென்பார்க் |
(2-3) பலமணி - பல நிறமணிகள். பல நிறமணிகளாலாகிய அம்மனைகள் மேலே செல்கையில் வானவில்லின் தோற்றத்தை உண்டாக்கின.
(4) அம்பிகையைக் கனியென்றல்: 113.
82. அம்பிகை முத்தாலாகிய அம்மனையாடும்போது அவள் நகை, கை, கண் ஆகியவற்றின் ஒளி தோய்க்யில் அது நிறமாறிக் காட்டுதலால் பிறருக்கு உண்டாகும் மயக்கம் கூறப்படும்.
(அடி, 1) நகையாகிய முத்தின் ஒளியை. நிற்க - ஒன்றும் கூறாமல் நிற்ப.
(1-3) கையின் செந்நிறம் பாய்ந்து சிவப்பாகத் தோற்றக் கண்டார் அவ்வம்மனைகள் மாணிக்கத்தாற் செய்யப்பட்டனவெனவும், கண்ணின் கருநிறம் பாய்ந்து கரியனவாகத் தோற்றக் கண்டார் நீலமணியாலாயின வெனவும் கூறினர். அங்ஙனம் கூறுவார் கூற்றுக்கள் புறச்சமயத்திலுள்ளார் தத்தம் சமயக் கொள்கைகளே சிறந்தனவென்று கூறுவதை ஒத்தன; “தந்தங்கருத்துக் கமைந்தபடி சாற்றிச் சாற்றி முழுமாயச் சலதி மூழ்கித் தடுமாறுச் சமயத்தவர்போற் றலைமயங்கும்” (405); “சமய வாதிக டத்த மதங்களே, அமைவ தாக வரற்றி மலைந்தனர்” (திருவா.)
|