பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்95

வித்துரு மத்திலி ழைத்தவு நின்கை
   விரற்பவ ளத்தளிரின்
விளைதரு மொள்ளொளி திருடப் போவது
   மீள்வது மாய்த்திரிய

 அத்தன் மனத்தெழு தியவுயி ரோவியம்
   ஆடுக வம்மனையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
   ஆடுக வம்மனையே.    
(7)

81.
விளரிமி ழற்றளி குமுறுகு ழற்கொடி    
   வீசிய வம்மனைபோய்    
விண்ணி னிரைத்தெழு வதுக்க னந்திரு    
   மேனிய தானவருக்    

கிளநில வுமிழ்பரு முத்தின் கோவை
   யெடுத்தவர் திருமார்புக்
கிடுவ கடுப்பவு மப்பரி சேபல
   மணியி னியற்றியிடும்

    கண்ணார்கழல்பந் தம்மான்ப் பாட்டயருங் கழுமலமே” (தே. திருஞா.) அம்பிகை பாடும் பாட்டுக்கு மாணிக்கப் பந்து உருகியதென்றபடி. இசைக்குக் கல்லுருகு மென்பதுபற்றி இச்செய்தியை யமைத்தார்; “வாழொப்பிலாதவன் சேயொப்பிலாத மழவதிரை, ஆழிக் கடல்விட்டு நீபாடுங் காலத்தரி செலுங்கால், நீழற் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணி. தான், காழொப் பினுநின் னிசைகேட்குங் காற்கரைந் தேகுமென்றே” (தமிழ் நா.); “சுருக்கா விசையின் மணிகரைந்து சோர்ந்து, திருக்கா தரவுகனந் தீர” (திருக்கழுக்குன்றத்து உலா, 102.)

    (3) வித்துருமம் - பவளம்.(பி-ம்.) ‘போயது மீள்வது மாய்த்’.

    (4) உயிரோவியம்: 62.

    81. அம்பிகை முத்தினாலும் பலநிறமணிகளாலும் செய்த அம்மனைகளை ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) விளரி - ஒரு பண். குமுறுதல் - ஒலித்தல். கொடியாகிய நீ. வீசிய அம்மனை யென்றது இங்கே முத்தினாலாகிய அம்மனைகளை. நிரைத்தெழுவது - வரிசையாகி எழுதல். (பி-ம்.) ‘விண்ணினிரைத்திடுவது’. ககனம் திருமேனியதானவர் - ஆகாசமே திருமேனியாக உள்ள சிவபெருமான்; அது: பகுதிப் பொருள் விகுதி (83); “வேத மொழிவிசும்பு மேனி” (திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 2.)