பக்கம் எண் :

94குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தை
   பிறைமுடி துளக்கமுடமேற்
பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப்
   பெண்கொடியு மாடன்மான

வெயரா மனம்புழுங் கிடு்மரர் தச்சனும்
   வியப்பச் செயுந்தவளமா
மேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலா
   வீசத் திசைக்களிறெலாம்

அயிரா பதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி
   அம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(6)

வேறு
80.
முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர்
   முளரிம ணங்கமழ
மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்
   முயங்கி மயங்கியிடக்

கொத்து மணித்திர ளிற்செயு மம்மனை
   குயிலின்மி ழற்றியநின்
குழலினி சைக்குரு கிப்பனி தூங்கு
   குறுந்துளி சிந்தியிட

    (2) எந்தை - சிவபிரான். துளக்க - அசைக்க. சிவபெருமான் முடி துளக்கியதால் அவர் சிரத்தின்மேலுள்ள கங்கையில் நுரை பொங்கியது; அந்நுரை அம்மான் போலத் தோற்றுதலின் கங்கையும் அம்மனையாடும் தோற்றத்தை அளித்தது. அப்பெண் கொடி - கங்கை. (பி-ம்.) ‘பொங்குவ தம்மனையையப்பெண்.’

    (3) தவளம் - வெண்மை.

    80. முத்து, மாணிக்கம், பவளம் என்பவற்றால் இயற்றிய அம்மனைகளை அம்பிகை ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) கையிலிருந்து சென்ற அம்மானை தாமரையின் மணத்தை வீச அதன்மேல் அந்தமணம் பற்றி வண்டு மொய்த்தது. அம்பிகையின் திருக்கரம் தாமரையின் நறுமணத்தை யுடையதென்றபடி. மைவிழி வண்டின் - கரிய விழியாகிய வண்டைப்போல்; கண்கள் அம்மனையை நோக்கினவாதலின் இங்ஙனம் கூறினார்.

    (2) மணி - மாணிக்கம். குழலினிசை - வேய்ங்குழல் போன்ற இசை அம்மனையாடுவார் அதற்குரிய இசைப்பாட்டுப் பாடுவார்; “கருந்தடங்