78. | தமரான நின்றுணைச் சேடியரி லொருசிலர் | | தடக்கையி னெடுத்தாடுநின் | | தரளவம் மனைபிடித் தெதிர்வீசி வீசியிட | | சாரிவல சாரிதிரியா |
| நிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறிய | | நிரைநிரைய வாய்க்ககனமேல் | | நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமும் | | நிரைத்துவைத் ததுகடுப்ப |
| இமிரா வரிச்சுரும் பார்த்தெழப் பொழிலூ | | டெழுந்தபைந் தாதுலகெலாம் | | இருள்செயச் செய்துநின் சேனா பராகமெனும் | | ஏக்கமள காபுரிக்கும் |
| அமரா பதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவி | | அம்மானை யாடியருளே | | ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண் | | |
79. | உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீ | | துதித்தவ ளெதிர்த்துநின்னோ | | டொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மனைதேடி | | ஓடியா டித்திரியநீ |
78. அம்பிகை சேடியரோடு அம்மானையாடுதல் கூறப்படும்.
(அடி, 1.) சிலர் பிடித்து வீசி வீசித் திரியா; திரியா - திரிந்து.
(2) நிரை - வரிசை. நிற்கின்றது - நிற்கும் காட்சி. நிரைத்து வைத்தது - வரிசைப்படுத்தி வைத்த செயலை.
(3) இமிரா - ஒலித்து (பி-ம்.) ‘ஆர்த்தெழும். அம்பிகை பல அம்மானைகளை, வீசி ஆடியதனால் வண்டுகள் அஞ்சி ஆர்த்தெழுந்தன. அவையெழவே அவற்றின்மேற் படிந்திருந்த பூந்தாது எங்கும் பரந்து செறிந்தது. சேனாபராகம் - சேனையின் புழுதி. (பி-ம்.) ‘எக்கரளகாபுரிக்கும்’.
(3-4.) பூந்தாதின் செறிவை அம்பிகை திக்குவிசயம் செய்த காலத்தில் அவள் சேனைக்குமுன் எழுந்த தூளிப்படலம் போன்றதெனக் கருதி அளகாபுரியினரும் அமராபதியினரும் அஞ்சினர்.
79. அம்பிகை அம்மானையாடுதலைக் கண்டு சிவபிரான் களித்தல் கூறப்படும்.
(அடி, 1) மலர் மீது உதித்தவள் - திருமகள். ஒட்டி - பந்தயம் கூறி. உதித்தவள் திரிய.
|