வேறு 92. | சொற்கொடி யோடு மலர்க்கொடி கொய்து | | தொடுத்த விரைத்தொடையும் | | சுந்தரி தீட்டிய சிந்துர மும்மிரு | | துங்கக் கொங்கைளின் |
| விற்கொடி கோட்டிய குங்கும முங்குடை | | வெள்ளங் கொள்ளைகொள | | வெளியே கண்டுநின் வடிவழ கையன் | | விழிக்கு விருந்துசெய |
| இற்கொடி யோடு கயற்கொடி வீரன் | | எடுத்த கருப்புவிலும் | | இந்திர தனுவும் வணங்க வணங்கும் | | இணைப்புரு வக்கொடிசேர் |
| பொற்கொடி யிமய மடக்கொடி வைகைப் | | புதுநீ ராடுகவே | | பொருநைத் துறையொடு குமரித் துறையவள் | | |
93. | கொள்ளைவெ ளருவி படிந்திடு மிமயக் | | கூந்தன் மடப்பிடிபோற் | | கொற்கைத் துறையிற் சிறைவிரி யப்புனல் | | குடையு மனப்பெடைபோல் |
92. (அடி, 1) சொற்கொடி - கலைமகள். மலர்க்கொடி - திருமகள். தொடை - மாலை. சுந்தரி - இந்திராணி.
(2) விற்கொடி கோட்டிய - துர்க்கை எழுதிய. வடிவழகு - இயற்கையழகு.
(3) இற்கொடி - மனைவி; இங்கே இரதி. கயற்கொடி வீரன் - காமன். காமன் மனைவியோடு வில்லெடுத்தல்; 55. இந்திர தனு-வானவில். இரதியின் வில்லும் காமன் வில்லுமாகிய இரண்டு விற்களும் இந்திர தனுக்கள் இரண்டும் புருவங்களுக்கு உவமை; இந்திரதனு இரண்டென்பது, “எழிலியும், தளிதளித்திரு தனுவெடுத்தன” (தக்க. 159) என்பனாலும் அதன் விசேடக் குறிப்பினாலும் உணரப்படும்.
93. (அடி, 1) கொள்ளை - மிகுதி. இமயக் கூந்தல் மடப்பிடி: 62, 375. மடப்பிடி முதலியன அம்பிகைக்கு உவமை.
|