பக்கம் எண் :

106குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தெள்ளமு தக்கட னடுவிற் றோன்று
   செழுங்கம லக்குயில்போல்
தெய்வக் கங்கைத் திரையூ டெழுமொரு
   செம்பவ ளக்கொடிபோற்

கள்ளவிழ் கோதையர் குழலிற் குழலிசை
   கற்றுப் பொற்றருவிற்
   களிநற வுண்ட மடப்பெடை யோடு
   கலந்து முயங்கிவரிப்

புள்ளுறை பூம்பொழின் மதுரைத் துரைமகள்
   புதுநீ ராடுகவே
பொருநைத் துறையொடு குமரித் துறையவள்
   புதுநீ ராடுகவே.    
(10)

10. ஊசற் பருவம்

94.
ஒள்ளொளிய பவளக் கொழுங்கான் மிசைப்பொங்கும்
   ஒழுகொளிய வயிரவிட்டத்
தூற்றுஞ் சேழுந்தண் ணிலாக்கால் விழுந்தனைய
   ஒண்டரள வடம்வீக்கியே

அள்ளிட வழிந்துசே யொளிதுளும் புங்கிரண
   அரணரத் நப்பலகைபுக்
காடுநின் றோற்றம்ப் பருதிமண் டலம்வளர்
   அரும்பெருஞ் சுடரையேய்ப்பத்

    (2) அமுதக்கடல் - பாற்கடல்; அமுதம் - பால். கமலக்குயில் -திருமகள்.

    (3) குழல் - கூந்தல். குழலிசை - வேய்ங்குழலிசை. பொற்றரு - கற்பகம்.

    (3-4) வரிப்புள் - கீற்றுக்களையுடைய ஆண்வண்டு.

    94. அம்பிகை மாணிக்க ஊசலை ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) கால் - தூண். வயிரத்தாலாகிய விட்டம். கால் விழுந்தனைய - ஒழுகினல்போன்ற. தரளவடம் - முத்துவடம் (பி-ம்.) ‘வீக்கிடும்’.

    (2) அள்ளிட - அள்ளிக்கொள்ளும்படு. (பி-ம்.) ‘செற்றொளி’. அருணரத்நப் பலகை - மாணிக்கப் பலகை; அருணம் - சிவப்பு. சிவபெருமான் சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருப்பர்.