பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்107

தெள்ளுசுவை யமுதங் கனிந்தவா னந்தத்
   திரைக்கடன் மடித்துழக்கும்
செல்வச் செருக்கர்கண் மனக்கமல நெக்கபூஞ்
   சேக்கையிற் பழையபாடற்

புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தமவல்லி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழிகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(1)

95.
விற்பொலிய நிலவுபொழி வெண்ணித் திலம்பூண்டு
   விழுதுபட மழகதிர்விடும்
வெண்டரள வூசலின் மிசைப்பொலிவ புண்டரிக
   வீட்டிற் பொலிந்துமதுரச்

சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின் றவளுநின்
   சொருபமென் பதுமி ளநிலாத்
தோற்றுமதி மண்டலத் தமுதமய மாயம்மை
   தோன்றுகின் றதும்விரிப்ப

எற்பொலிய வொழுகுமுழு மாணிக்க மணிமுகப்
   பேறிமழை முகிறவழ்வதவ்
வெறிசுடர்க் கடவுடிரு மடியிலவன் மடமகள்
   இருந்துவிளை யாடலேய்க்கும்

    (3) ஆனந்தமாகிய கடல். செல்வம் - சிவஞானமாகிய செல்வம். செருக்கர்கள் - இறுமாப்புடையவர்கள்; “இருங்களியாயின்றி யானிறு மாப்பவின் பம்பணிவோர், மருங்களி யாவன லாடவல்லோன்” ( திருச்சிற் 52) என்பதில் இறுமாப்புக் கூறியது காண்க. மனக் கமலமாகிய சேக்கை; பூ - பொலிவு. பழைய பாடல் - வேதம்.

    (4) புள் - வண்டு. கமலமென்றற்கேற்ப்ப் புள்ளொலி கூறப்பட்டது. புழுகுநெய்ச் சொக்கர்: 157.

    (3-4) சேக்கையிற் புகுந்த வென்க.

    95. அம்பிகை முத்தாலாகிய ஊசலை ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) பொலிவ - விளங்குதல். புண்டரிகம் - வெண்டாமரை. (பி-ம்.) ‘வீட்டுப்’.

    (2) சொல்லுகின்றவள் - கலைமகள். கலைமகளை அம்பிகையின் ஒரு கூறென்பர். (பி-ம்.) ‘தூற்றுமதி மண்டலத் தமுதமாயம்மை நீ.’ அம்பிகை சந்திரமண்டலத்தில் இருத்தல்: 73.

    (3) எல் - ஒளி. மாணிக்க மணிமுகப்பு - மாணிக்கம் பதித்த அழகிய வாயில்மாடம். சுடர்க்கடவுள் - சூரியன். மடமகள் - யமுனை நதி;