பக்கம் எண் :

108குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பொற்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(2)

96.
உருகிய பசும்பொன் னசும்பவெயில் வீசுபொன்
   ஊசலை யுதைந்தாடலும்
ஒண்டளி ரடிச்சுவ டுறப்பெறு மசோகுநற
   வொழுகுமலர் பூத்துதிர்வதுன்

திருமு னுருவங்கரந் தெந்தையார் நிற்பது
   தெரிந்திட நமக்கிதுவெனாச்
செஞ்சிலைக் கள்வனொரு வன்றொடை மடக்காது
   தெரிகணைகள் சொரிவதேய்ப்ப

எரிமணி குயின்றபொற் செய்குன்று மழகதிர்
   எறிப்பவெழு செஞ்சோதியூ
டிளமதி யிமைப்பதுன் றிருமுகச் செவ்விவேட்
   டெழுநாத் தலைத்தவமவன்

புரிவது கடுக்குமது ராபுரி மடக்கிள்ளை
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே    
(3)

அது நீல நிறமுடையது. மாணிக்கமாடத்துக்குச் சூரியனும் அதில் தவழும் மேகத்திக்கு யமுனையும் உவமைகள்.

    96. அம்பிகை பொன்னூசல் ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) அசும்ப - துளிப்ப. மகளிர் உதைத்தலால் அசோகு மலரென்பர்; “ஏடவிழ. மகிழ்சு வைக்க வெழிற்பாலை நண்பு கூடப், பாடலை நிந்திக் கத்தேம்படிமுல்லை நகைக்கப்புன்னை, ஆட நீள் குராவ ணைக்க வசோகுதைத் திடவா சந்தி, பாடமாப் பார்க்க வார்சண் பகநிழல் படத்த ளிர்க்கும்” (சூடா. 12-ஆம். 95) அசோக மரத்தில் தொடுத்த ஊசலாதலின் இங்ஙனம் கூறினார்; “ஒண்டளிர்ச் செயலை, ஓங்குசினைத் தொடுத்த வூசல்” (அகநா. 68:5-6); “செந்தளிர்ப்பிண்டிசை சினை தொறுந் தொடுத்த .......... ஊக்கமை யூசல்” (பெருங். 1.46: 176-9.)

    (2) தெரிந்து இடம் நமக்கு இது எனா; இடம் - சமயம்; “இடனறிந் தூடி” (நாலடி. 384.) கள்வன் - மன்மதன்.

    (1-2) அசோக மலரும் மன்மதன் அம்புகளில் ஒன்றாதலின் இங்ஙனம் கூறினார்.

    (3) எரிமணி - நெருப்பைப்போன்ற மாணிக்கம் (25.) குயின்ற - பதித்த. இமைப்பது - விளங்குவது. எழுநாத்தலை - அக்கினியில். அவன் - சந்திரன்.