பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்109

 97.
கங்கைமுடி மகிழ்நர்திரு வுளமசைந் தாடக்
   கலந்தாடு பொன்னூசலக்
கடவுடிரு நோக்கத்து நெக்குருகி யிடநின்
 
   கடைக்கணோக் கத்துமற்றச்

செங்கண் விடை யவர்மனமு மொக்கக் கரைந்துரு
   செய்கையவர் சித்தமேபொற்
றிருவூச லாவிருந் தாடுகின் றாயெனும்
   செய்தியை யெடுத்துரைப்ப

அங்கணெடு நிலம்விடர் படக்கிழித் தோடுவேர்
 
   அடியிற் பழுத்தபலவின்
அளிபொற் சுளைக்குடக் கனியுடைந் தூற்றுதேன்
   அருவிபில மேழுமுட்டிப்

பொங்கிவரு பொழின்மதுர மதுரைநா யகிதிருப்
   பொன்னூச லாடியருளே
 
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(4)

98.
சேர்க்குஞ் சுவைப்பாட லமுதொழுக வொழுகுபொற்
   றிருவூசல் பாடியாடச்
சிவபிரான் றிருமுடி யசைப்பமுடி மேற்பொங்கு
   செங்கணர வரசகிலம்வைத்

தார்க்கும் பணாடவி யசைப்பச் சராசரமும்
   அசைகின்ற தம்மனையசைந்
தாடலா லண்டமு மகண்டபகி ரண்டமும்
   அசைந்தாடு கின்றதேய்ப்பக்

    97. அம்பிகையாடும் ஊசலுக்கும் சிவபெருமான் திருவுள்ளத்திற்கும் ஒப்புமை கூறப்படும்.

    (அடி, 1) நோக்கத்து - பார்வையினால்; அவர் கண்களுள் ஒன்று அக்கினியாதலின் அதனாற் பொன்னூசல் உருகிற்றென்றார்.

    (3) விடர் - பிளப்பு. வேரடியிற் பழுத்த பலவு: 52, 56. அளி - மிகக்கனிந்த. பொற்சுளை - பொன்போன்ற சுளை. பிலம் ஏழும் - கீழுலகங்கள் ஏழினையும்.

    (4) (பி-ம்.) ‘மதுரை மதுரநாயகி’.

    98. (அடி, 1) பாடலைப்பாடி ஊசலை ஆட என்க. மகிழ்ச்சியால் சிவபிரான் தலையசைத்தனர் (79.) அரவரசு - ஆதிசேடன். அகிலம் - உலகம்.

    (2) பணாடவி - படங்களின் தொகுதி (6.) அம்மனை - தாயாகிய நீ. அகண்ட பகிரண்டமும் - வெளியிலுள்ள அண்டங்கள் முழுவதும்.