| போர்க்கோல மேதிரு மணக்கோல மானபெண் | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
100. | குழியும் பசுங்கண் முசுக்கலை வெரீஇச்சிறு | | குறும்பலவி னெடியபாரக் | | கொம்பொடி படத்தூங்கு முட்புறக் கனியின் | | குடங்கொண்டு நீந்தமடைவாய் |
| வழியுங் கொழுந்தே னுவட்டெழு தடங்காவின் | | வள்ளூகிர்க் கருவிரற்கூன் | | மந்திக ளிரிந்தேகும் விசையினில் விசைத்தெழு | | மரக்கோடு பாயவயிறு |
| கிழியுங் கலைத்திங்க ளமுதருவி தூங்குவ | | கிளைத்தவண் டுழுபைந்துழாய்க் | | கேசவன் கால்வீச வண்டகோ ளகைமுகடு | | கீண்டுவெள் ளருவிபொங்கிப் |
| பொழியுந் திறத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
ஏற்றலும் - எதிர்த்தவுடன். மலர்க்கட்கணை துரக்கும் கரும்புருவ வில் - மலர் போன்ற கண்ணாகிய கணையைச் செலுத்தும் கரிய புருவமாகிய வில்; மலராகிய தேனையுடைய அம்பைச் செலுத்தும் கரும்பின் உருவமாகிய வில். புருவ வில்லையும் கைவில்லையும் வளைத்து. (பி-ம்.) ‘ஏற்றலமரக்’; ‘கருப்புருவ வில்’.
100. குரங்குகளின் செயல்கள் கூறப்படும்.
(அடி, 1) பொழிலில் உண்டாகும் தேன்வெள்ளத்தில் பலாப்பழத்தைக் குடமாகக் கொண்டு முசுக்கலை நீந்தியது; வெரீஇ - அஞ்சி. முட்புறக் கனி - பலாப்பழம். கனியாகிய குடம்; இன்: வேண்டா வழிச்சாரியை. (பி-ம்.) மடல்வாய்.’
(2) உவட்டெழு - பெருக்கெடுக்கின்ற. வள் உகிர் - கூரிய நகம். மந்தி - பெண் குரங்கு. இரிந்து ஏகும் - கெட்டு ஓடுகின்ற (பி-ம்.) ‘இருந்தேகும்.’
(3) தூங்குவ - ஒழுகுதல். அண்டகோளகைமுகடு - வானத்தின் உச்சி. கீண்டு - பிளந்து; “கீள்வது செய்த கிழவோன்” (திருச்சிற். 247.) வெள்ளருவி - இங்கே, கங்கை.
|