101. | ஒல்குங் கொடிச்சிறு மருங்கிற்கிரங்கிமெல் | | லோதிவண் தார்த்தெழப்பொன் | | ஊசலை யுதைந்தாடு மளவின்மலர் மகளம்மை | | உள்ளடைிடக் கூன்பிறைதழீஇ |
| மல்குஞ் சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல் | | வாணியென் றசதியாடி | | மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்கொரு | | வணக்கநெடு நாண்வழங்கப் |
| பில்குங் குறும்பனிக் கூதிர்க் குடைந்தெனப் | | பிரசநா றைம்பாற்கிளம் | | பேதையர்க ளூட்டுங் கொழும்புகை மடுத்துமென் | | பெடையொடு வரிச்சுரும்பர் |
| புல்குந் தடம்பணை யுடுத்தமது ரைத்தலைவி | | பொன்னூச லாடியருளே | | புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி | | |
102. | கொன்செய்த செழுமணித் திருவூச லரமகளிர் | | கொண்டாட வாடுந் தொறும் | | குறுமுறுவ னெடுநீல வருத்துஞ் சகொரமாய்க் | | கூந்தலங் கற்றைசுற்றும் |
101. (அடி, 1) ஒல்கும் - தளர்கின்ற. (பி-ம்.) ‘சிறு மருங்குற்கு.’ ஓதி - கூந்தல். எழ - எழும்படி.
(1-2) உள்ளடிக் கூன்பிறை தழீஇ மல்கும் சுவடு - உள்ளங்காலில் உள்ள வளைந்த பிறையிம் சுவடு; இது சிவபெருமான் அம்பிகையின் ஊடலை நீக்கும் பொருட்டுப் பணிந்த காலத்து அமைந்தத்து. வலம் பிரிக்கீற்று - சங்க ரேகை. வாணி: விளி. அசதியாடல் - பரிகாசம் செய்தல் (சீவக: 1871.) முறுவல் கோட்ட - நகைப்ப. (பி-ம்.) ‘முறுவல் கோடல்’. திருமகள் அசதியாடி நகைத்தலினால் அம்பிகை நாணமடைந்து தலைவணங்கினாள். வணக்கத்தை நெடிய நாணம் உண்டாக்க.
(3) கூதிர்க்கு உடைந்தென - கூதிர்ப்பருவத்திற்கு மெலிசவற்றதாக. பிரசம் - தேன். ஐம்பாற்கு - கூந்தலுக்கு. கூதிர்க்குளிரால் வருந்திய வண்டு புகையின்கண் சென்று குளிர் காய்ந்தது.
(4) தடம் பணை - பெரிய வயல்கள்.
102. (அடி, 1) கொன் - பெருமை. அரமகளிர் - தெய்வப் பெண்கள். முறுவலாகிய நிலவை. சகோரம் - நிலவை உண்ணும் பறவை.
|