பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்113

தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின்
   செங்கைப் பசுங்கிள்ளையாய்த்
தேவதே வன்பொலிவ தெவ்வுருவ மாமவன்
   திருவுருவின் முறைதெரிப்ப

மின்செய்த சாயலவர் மேற்றலத் தாடிய
   விரைப்புனலி னருவிகுடையும்
வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
   மென்பிடியை யஞ்சிநிற்கும்

பொன்செய்த மாடமலி கூடற் பெருஞ்செல்வி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(9)

103.
இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
   டரைத்திடு மரிச்சிலம்பும்
இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொன்
   எழுதுசெம் பட்டுவீக்கும்    

    (1) (பி-ம்.) ‘நங்கையின்’. அம்பிகை தன் திருக்கையில் கிளியை ஏந்துவள். தேவ தேவன் - சிவபெருமான். (பி-ம்.) ‘தேவர் தேவன்’.

    (102) சிவபெருமான் அம்பிகையின் முறுவல் முதலிவற்றாற் சிறந்த இன்பத்தை அடைய வேண்டிச் சகோரப் பறவையாகவும் வண்டாகவும் கிளியாகவும் ஆயினர். அச்செயல் உலகிலுள்ள எல்லாவுருவமும் அவரது வடிவமே யென்னும் இயல்பை வெளிப்படுத்தியது.

    (3) மேற்றலத்து - மேன்மாடத்தில். மகளிர் மேன்மாடத்தில் நீர் ஆட அந்நீர் கீழே வந்து வெள்ளானையை ஆட்டியது. இதனால் மாடங்களின் உயர்வு கூறப்பட்டது. வெள்ளானை தன்னுடைய வேற்று நாற்றத்தை அறிந்து பிடி ஊடுமென்று அஞ்சி நின்றது.

    103. அம்பிகையின் பாதாதிகேசம் கூறப்படும். தெய்வங்களைப் பாதாதிகேசமாக வருணித்தல் மரபென்பர்.

    (அடி, 1) அரிச் சிலம்பு - உள்ளிடு பரலையுடைய சிலம்பு. (பி-ம்.) ‘மறைச் சிலம்பும்’. இறும் - ஒடியும். வீக்கும் - கட்டிய.