பக்கம் எண் :

114குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

திருவிடையு முடைதார மும்ஒட் டியாணமும்
   செங்கைப் பசுங்கிள்ளையும்
திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
   திருநாணு மழகொழுகநின்

றருள்பொழியு மதிமுகமு முகமதியி னெடுநில
   வரும்புகுறு நகையுஞான
ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
   டமராடு மோடரிக்கட்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(10)

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.


    (2) உடைதாரம், ஒட்டியாணம்: இடையிலணியும் ஆபரணங்கள். தரள உத்தரியம் - முத்தாலாகிய மேலாடை. (பி-ம்.) ‘தரளமு முத்தரிகமும்’.

    (3) குழையாகிய மகரம்.

    (4) கயலுமாகிய வடிவழகு என்க.