பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்115

மதுரைக் கலம்பகம்


கட்டளைக் கலித்துறை
104.
புந்தித் தடத்துப் புலக்களி றோடப் புளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்மலர் தூய்
வந்திப் பதுந்தனி வாழ்த்துவ தும்முடி தாழ்த்துநின்று
சிந்திப் பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே.          
(1)

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

-தரவு-
105.
மணிகொண்ட திரையாழி சுரிநிமிர மருங்கசைஇப்
பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும்
பூந்தொத்துக் கொத்துவிழ்ந்த புனத்துழாய் நீழல்வளர்
தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையும்

    104. புந்தித்தடம் - உள்ளமாகிய இடம். புலக்களிறு - புலங்களாகிய ஆண்யானைகள். புளிறுதல் - பிளிறுதல்; மோனைபற்றிப் பிளிறு புளிறென்றாயிற்று; (பி-ம்) ‘பிளிறு.’ புலக்களிறு ஓடும்படி புந்தித் தடத்திலே புளிறுகின்ற. தொந்தி - பெருவயிறு. தந்தி - விநாயக்க் கடவுள். தந்தை தமிழ்க்கு உதவு-நின் தந்தையார்மேற் பாடுகின்ற தமிழ் நூலுக்கு உதவி புரிவாயாக. என்பது என் - என்று கூறுவது எதற்கு? மிகை யென்றபடி (பி -ம்) ‘தண்ணளிதூய்.’ சித்திவிநாயகன்மதுரையிலுள்ள தலவிநாயகர் சித்திவிநாயகன் சேவடியை வந்திப்பதும் வாழ்த்துவதும் சிந்திப்பது மன்றி, உதவு என்பது என் என இயைக்க

    விநாயகக் கடவுளை வந்திப்பது முதலியன செய்தால் அவர் வேண்டுவனவற்றைத் தாமே உணர்ந்து அருள்புரிவராதலின் இவர்பால் இன்னது வேண்டுமென விண்ணப்பித்தல் மிகையென்பது கருத்து.

    சித்திவிநாயகனென்று பின் கூறினமையின் தந்தி யென்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது.

    105. (தரவு.) சுரி - மடிப்பு, மருங்கு அசைஇ - இடையில் உடுத்து. பணிகொண்ட முடிச்சென்னி அரங்கு - ஆதிசேடனாகிய பாம்பு கொண்ட முடியையுடைய தலையாகிய இடத்தில், பைந்தொடி - பூமிதேவி. புனத்