பக்கம் எண் :

116குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத்  
தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலைநிற்ப  
அப்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லியொடும்  
செம்பொன்மதிற் றமிழ்க்கூடற் றிருநகரம் பொலிந்தோய்கேள்.  

-தாழிசை-
1.
விண்ணகரம் பிறவரசுஞ் சிலரெய்த விடுத்தொருநீ
பெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே.

2.
தேம்பழுத்த கற்பகத்தி னறுந்தெரியல் சிலர்க்கமைத்து    
வேம்பழுத்து நறைக்கண்ணி முடிசைசென்னி மிலைச்சினையே    

3.
வானேறுஞ் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த
மீனேறோ வானேறும் விடுத்தடிக ளெடுப்பதே.

துழாய் - முல்லைநிலத்துக்குரிய துளசி. தேந்தத்தும் - தேன் பொங்கும். நறை-வாசனை. கஞ்சத்து- தாமரை மலரில் இருக்கும். திருத்திழை - திருமகள். துழாய் நீழல்வளர் திருந்திழை; “பைந்துழாய்க் காடுவிரி தண்ணிழலொதுங்கு மொர்பசுங்கொடி” (9) மனைக்கிழவன் - திருமால். அவர் திருமார்பு திருமகளுக்கும் துடை பூமிதேவிக்கும் உரியனவாதலின் எதிர் நிரனிறையாகக் கொள்க. முதற் கற்பு-தலைமைக்கற்பு. வேறொரு தெய்வமாகிய அம்பிகையை வணங்குதிலினால் பூமிதேவியும் திருமகளும் தம் கற்பிற் பிறழ்ந்திலர்; தம் கணவர் ஏவலின்படி குலதெய்வத்தை வணங்குதல் கற்புடைய மகளிர்க்கு இயல்பு (தொல். மெய்ப்.சூ.24) அபிடேக வல்லி - அங்கயற்கண்ணம்மை; அபிடேகம் - கிரீடம். (பி-ம்.) முடிச்சூட்டும்.’ பூமிதேவியும் திருமகளும் தத்தம் இடத்தை விட்டுவந்து அங்கயற்கண்ணம்மைக்குப் பணி பூண்டனர்.

    இது தரவாதலின் பாட்டுடைத் தலைவரைப் பொலிந்தோயென முன்னிலைப் படுத்தினர்.

    (தாழிசை.) 1. விண்ணரசு - தெய்வலோகத்தின் அரசுரிமை. பிறஅரசு-பிரமலோகம், வைகுண்டம் முதலியவற்றின் அரசுரிமை. பெண்ணரசு - அங்கயற்கண்ணிம்மை. பிறருக்கு வேறு வேறு அரசு பதவிகளை உதவிய நீ பெண் அளித்த அரசை ஏற்றாய். இஃது என்னை!

    2. கற்பகத்தின் நறுந்தெரியல் - கற்பகமலர் மாலை. சிலர் - இந்தரன் முதலியோர். வேம்பின் பூவை அழுத்துகின்ற கண்ணி; கண்ணி - தலையிற் சூடுவது.

    3. வானேறு - இடி; இஃது இந்திரனது கொடி; “அசனித் துவசத்தோன்” (திருக்கழுக்குன்றத்துலா, 3) சிலபுள் - அன்னமும் கருடனும்; சில இரண்டு; “சின்மலர் பழிச்சுதும்” என்பர் பின். மீனேறு - ஆண்மீனை வரைந்த கொடி. ஆனேறு - விடைக்கொடி. அடிகள் - ஸ்வாமியாகிய தேவரீர்.