4. | மனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே | | கனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே |
5. | விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பெருநைத் | | தண்ணாறு குடைந்துவையைத் தண்டுறையும் படிந்தனையே |
6. | பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம் | | வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே. |
அராகம் 1. | அவனவ ளதுவெனு மவைகளி லொருபொருள் | | இவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை. |
2. | இலதென வுளதென விலதுள தெனுமவை | | அலதென விவிட வரியதொ னளவினை. |
3. | குறியில னலதொரு குணமில னெனநினை | | அறிபவ ரறிவினு மறிவரு நெறியினை. |
4. | இருமையு முதவுவ னெவனவ னெனநின | | தருமையை யுணர்வுறி னமிழ்தினு மினிமையை. |
தாழிசை 1. | வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை | | செய்கைக்கென் ற்றியேமாற் றிருமுடிமண் சுமந்ததே. |
4. மனத்தின்கண் வட்டமிடும் சுருதி; சுருதி - வேதம்; அது மனனம் செய்யப்படுதலின் இங்ஙனம் கூறினார். வய - வலி. மாறு அன்றே - விரோதமல்லவா? கனவட்டம் - பாண்டியர்களின் குதிரையின் பெயர். களிப்பது மாறன்றே.
5. விண்ணாறு - கங்கை. அது சிறு துளியளவாய் ஒரு சடையில் அடங்கினமையின் இறைவர் நனைந்தில். (பி-ம்.) ‘வைகை’. ஒரு பெரிய ஆற்றைத் தலையிலே கொண்டும் நனையாத தன்மையையுடைய நீ வையையும் பொருநையும் ஆகிய சிற்றாறுகளில் நீராடுதல் பொருந்துமோ வென்றபடி.
6. தமிழின் மழலை - தமிழாகிய மழலைச் சொல்லை. கன்னித் தமிழாதலின் தமிழின் மழலையென்றார்.
(அராகம்) 3. (பி-ம்.) ‘அறிபவரறியினும்’. 4. ‘உதவுவதெவன்’.
(தாழிசை.) 1, (பி-ம்.) ‘வையைக்கோ’. கங்கை வானதிக்கோ - கங்கை நதிக்குக் கரை கட்டவோ. (பி-ம்.) ‘அறியோமாற்’. திருமுடியினமேல் மண்சுமந்த காலத்து அவர் தலையிலுள்ள கங்கையின் மேலும் மண்பட்டதாகலிம் இங்ஙனம் கூறினார்.
|