2. | அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவள் | | தரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே |
3. | முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே | | மலைகொண்ட புயத்தென்னீ வளைகொண்டு சுமந்ததே. |
4. | ஊன்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர் | | மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே. |
அம்போதரங்கம் | போகமாய் விளைந்தோய்நீ, புவனமாய்ப் பொலிந்தோய்நீ | | ஏகமா நிருந்தோய் நீ, எண்ணிறந்து நின்றோய் நீ, | | வானு நீ, நிலனு நீ, மதியு நீ, கதிரு நீ, | | ஊனு நீ, உயிரு நீ, உளது நீ, இலது நீ. |
எனவாங்கு,
2. அரும்பை இட்டு: “மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார்” (திருவா.) பச்சிலையிட்டு: “நொச்சியாயானுங் கரந்தை யாயினும், பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்” (திருவிடைமும். 19 : 9-10); “போதும் பெறாவிடிற் பச்சிலையுண்டு” (திருக்கழுமலமும். 12) அன்னை - செம்மனச் செல்வியென்னும் பிட்டு வாணிச்சி. பிட்டுப் பிட்டு உண்டாய் - பிட்டென்னும் சிற்றுண்டியை விண்டு உண்டாய். தலையன்பு - அவளது சிறந்த அன்பு.
3. மொய் வளை - உமாதேவியாரது. அன்றே - அல்லவே. அங்ஙனம் இருப்பவும், நீ வளை சுமந்தது ஏன்? மதுரையில் சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருவிளையாடலைக் குறித்தபடி.
4. ஊன்வலை - உடம்பாகிய வலை; ஊனை ஆகுபெயராக்கிப் பிறவியென்று பொருளுரைத்தலும் பொருந்தும். நின் புயத்து ஓர். ஒருத்தி - உமாதேவியார். அம்பிகை ஒரு வலைஞன் திருமகளாக வளர்ந்தமையின் அவகை மணம் செய்துகொள்ள வலைஞராயினார். இவ்வரலாறு வலை வீசின படலத்தால் அறியப்படும்.
(அம்போதரங்கம்.) கதிர் - சூரியன். ஊன் -உடல்.
எனவாங்கன்றது தனிச்சொல். என -என்று. ஆங்கு; அசை நிலை.
|