| பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக் |
| கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடி |
| அண்ணலா னே்று மண்ணுண்டு கிடப்பக் |
| கண்போற் பிறழுங் கெண்டவல னுயர்த்து |
5. | வரியுடற் கட்செவி பெருமூச்ச செறியப் |
| பொன்புனைந் தியன்ற பைம்பூண் டாங்கி |
| முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசிற் |
| பசும்பொனசும் பிருந்த பைம்பென்முடி கவித்தாங் |
| கிருநிலங் குளிர்தூங் கொருகுடை நிழற்கீழ் |
10. | அரசுவீற் றிருந்த வாதியங் கடவுணின் |
| பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும் |
| ஐம்புல வழக்கி னருச்சுவை யறியாச் |
| செம்பொருட் செல்வநின் சீரடித் தொழும்புக் |
| கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக |
15. | பிறிதொரு கடவடுட்குப் பெரும்பயன் றரூஉம் |
| இறைமையுண் டாயினு மாக குறுகிநின் |
| சிற்றடி யர்க்கே குற்றேவ றலைக்கொண் |