| டம்மா கிடைத்தவாவென்று | | செம்மாப் புறூஉந் திறம்பெறற் பொருட்டே. |
நேரிசை வெண்பா 106. | பொருணான் கொருங்கீன்ற பொன்மாடக் கூடல் | | இருணான் றிருண்டகண்டத் தெம்மான்-சரணன்றே | | மண்டுழா யுண்டாற்குக் கண்மலரோ டொண்மவுளித் | | |
கட்டளைக் கலித்துறை 107. | தடமுண் டகங்கண் டகந்தாள தென்றுநின் றண்மலர்த்தாள் | | நடமுண் டகமகங் கொண்டுய்ந்த வாவினி நங்களுக்கோர் | | திடமுண் டகந்தைக் கிடமுண் டிலையெனத் தேறவிண்ணோர் | | விடமுண்ட கந்தரச் சுந்தர சுந்தர மீனவனே. |
னயளிக்கும் தலைமை இருப்பினும் இருக்க; இறைமை - தலைமை. (18) அம்மா கிடைத்தவா - நமக்கு இப்பேறு கிடைத்தவாறு என்ன ஆச்சரியம்? (19) செம்மாப்பு -இறுமாப்பு. “இறுமாந்திருப்பன் கொலோ” (தே. அங்கமாலை.)
(முடிபு.) பொலிந்தோய் கேள்; திறம் பெறற் பொருட்டு, என நின் சின்மலர் பழிச்சுதும்.
106. பொருள் நான்கு - அறமுதலிய உறுதிப் பொருள்கள் நான்கு. சரண் - திருவடி. அன்று, ஏ: அசைநிலைகள். மணி துழாய் உண்டான் - திருமால்: துழாய் - துழாவி. தண் துழாய் குளிர்ந்த துவளம். தடம் - குளம், இடம்; சிலேடை. திருமால் தன் கண்மலரால் திருவடிகளை அருச்சித்ததனாலும் திருமுடி பட வணங்கும்போது அதன்கண் உள்ள திருத்துழாய் வீழ்வதனாலும் அவ்விரண்டற்கும் உரிய தடமென்றார்.
107. தடம் முண்டகம் - தடாகத்திலுள்ள தாமரைமலர். கண்டகத்தாதளது - முள்ளையுடைய தண்டையுடையது. என்று - என்று வெறுத்து. தாளாகிய நடஞ்செய்யும் முண்டகத்தை. அகம் - மனம். உய்ந்தவா - உய்ந்தது என்ன வியப்பு! திடம் உண்டு - வன்மை உளதாயிற்று. உண்டிலை - இல்லை. என விண்ணோர் தேற. விடமுண்ட பின்னர்த் தேறினர். கந்தரச் சுந்தர - கழுத்தால் அழக் பெற்றவரே; “கறை நிறுத்திய சுந்தரக் கடவுள்” (திருவிளை. நாடு. 1.) சுந்தர மீனவன் - சுந்தரபாண்டியர்.
|