அறுசீரக் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
108. | மீனேறுங் கொடிமுல்லை விடுகொல்லைக்கடிமுல்லை | | வெள்ளைப் பள்ளை | | ஆனேறும் வலனுயர்த்த வழகியசொக் கர்க்கிதுவும் | | அழகி தேயோ | | கானேறுங் குழல்சரியக் கர்ப்பூர வல்லிதலை | | கவிழ்ந்து நிற்ப | | ஊனேறு முடைத்தலையிற் கடைப்பலிகொண் டூரூர்புக் | | |
கட்டளைக் கலித்துறை 109. | மாற்றொன் றிலையென் மருந்துக்கந் | | தோசொக்கர் மாலைகொடார் | | கூற்றொன் றலவொரு கோடிகெட் | | டேன்கொழுந் தொன்றுதென்றற் | | காற்றொன் றிளம்பிறைக் கீற்றொன்று | | கார்க்கட லொன்றுகண்ணீர் |
108. மீனேறும் - மீனக்கொடியையும். கொடிமுல்லை விடு - முல்லைக்கொடியை வளர விடுகின்ற. கொல்லைக் கடி முல்லை - புனங்களையுடைய காவல் பெற்ற முல்லை நிலத்துக்குரிய. வெள்ளைப் பள்ளை ஆனேறும் - வெண்ணிறத்தையும் பருத்த வயிற்றையும் உடைய திருமாலாகிய இடபத்தையும்; திருமால் முல்லை நிலத்திற்குத் தெய்வம். உயர்த்த - குடியாக எடுத்த. இது வென்றது பிறகூறும் பலிகொண்டுழலுதலைச் சுட்டியது. கான் - நறுமணம். கர்ப்பூரவல்லி - அம்பிகை. தாம் அறஞ்செய்யத் தம் கணவர் இரந்துண்டாரென்பதுபற்றியும், தாம் கர்ப்பூரவல்லியாயிருப்ப இறைவன் புலால் நாறும் தலையிற் பலிகொள்ளுதல் பற்றியும் அம்பிகை தலை கவிழ்ந்தனள் (486, 617.) ஊனேறு முடைத்தலையில் - பிரமகபாலத்தில்; முடை - புலால் நாற்றம். கடைப்பலி - வாயில்தோறும் வாங்கும் பிச்சை. உழலுமாறாகிய இதுவென்க.
109. சோமசுந்தரக் கடவுளைக் காமுற்ற தலைவியின் வருத்தம் கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
மாற்று - பரிகாரம். மருந்து - அமுதம் போன்ற மகள். மருந்துக்கு மாற்றில்லையென்றது ஒரு நயம். கூற்று - யமன்; உயிரையும் உடம்பையும் வேறுபடுத்துபவன். ஒரு கோடி; பலவென்னும் பொருளது. கெட்டேன்: இரக்கக் குறிப்பு. கொழுந்து ஒன்று தென்றற் காற்று - இளந்
|