*விருத்தக் கலித்துறை 110. | ஒன்றே யுடம்பங் கிரண்டே யிடும்பங் குடம்பொன்றிலார் | | என்றே யறிந்தும்பி னின்றே யிரங்கென் றிரக்கின்றவா | | குன்றே யிரண்டன்றி வெண்பொன் பசும்பொன்குயின்றேசெயும் | | மன்றே யிருக்கப் புறங்கா டரங்காடவல்லாரையே. |
்தென்றல். கண்ணீரூற்று ஒன்றிய இவளுக்கு. உயிர் ஒன்று இல்லை - உயிரென்பதொன்று இல்லை. உடம்பு ஒன்று மாத்திரம் உள்ளது (202.)
காமமயக்கமுடையோருக்குத் தென்றலும் பிறையும் கடலும் துன்பம் செய்வன.
110. தலைவியின் பேதைமையைக் குறித்துத் தோழி இரங்கிக் கூறியது.
(பி-ம்.) *நெட்டிலை விருத்தம். நெடிலடி விருத்தம்.
உடம்பு ஒன்றே. அதில் ஒரு பங்கு தமக்கும் ஒரு பங்கு உமாதேவியாருக்கும் உரியனவாதலின் இடும் பங்கு இரண்டு என்றார். தமக்கென முழு உடம்பொன்று இலர். ஒரு பங்கு உமாதேவியாருக்கும் ஒரு பங்கு திருமாலுக்கும் உரியனவாதலின் தமக்கென உடம்பொன்று இல்லாதவரென்று கொள்ளுதலும் ஒன்று; “ஒரு பாதி மால்கொள மற்றொரு பாதியுமைகொளவே, இருபா தியையு மிழந்தான் புராரி” (தனிப்.); “திருமேனியிலோர், பாதியா ளுமைமற்றைப் பாதியுள தென்னின், மேகமே நிகர்மேனி மாலுளன்மற் றதற்கும் - வெறுவெளியே யிவர்க்குளது மெய்ம்மையிதுமகளே” (வாட்போக்கிக் கலம்பகம், 18.) பின்நின்று - வழிபட்டு. இரக்கின்றவா - இரத்தல் என்ன பேதைமை? குன்றே இரண்டென்றது வெள்ளி மலையையும் பொன்மலையையும், வெண்பொன் குயின்ற மன்று - மதுரையிலுள்ள வெள்ளியம்பலம். பொன்மன்று - சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம். புறங்காடு - மயானம. வல்லாரென்றது இகழ்ச்சிக் குறிப்பு. வல்லாரை இரக்கின்றவாறு.
தமக்கென உடம்பில்லாரும், பொன்னும் வெள்ளியும் செறிந்த இடங்கள் இருப்பவும் அவற்றை நீத்துப் புறங்காட்டில் ஆடுபவருமாகிய ஒருவரை இரப்பதனால் வரும் பயன் என் என்பு கருத்து.
|