கட்டளைக் கலிப்பா 113. | தனியி ருப்பவ ரென்படு வார்கெட்டேன் | | சற்று நீதியொன் றற்றவிவ் வூரில்யாம் | | இனியி ருப்பதொண் ணாதும டந்தைமீர் | | இடம் ருங்குஞ் சடைமருங் கும்மிரு | | கனியி ருக்குங் கடம்பவ னேசனார் | | கண்பு குந்தென் கருத்து ளிருக்கவும் | | பனியி ருக்கும் பிறைக்கூற்ற முற்றியென் | | பாவி யாவியை வாய்மடுத் துண்பதே. |
நேரிசை வெண்பா 114. | உண்ணமுத நஞ்சாகி லொண்மதுரைச் சொக்கருக்கென் | | பெண்ணமுத நஞ்சேயோ பேதைமீர் - தண்ணிதழி | | இந்தா நிலமே வெனச்சொலா ரென்செய்வாள் | | |
113. தலைவி கூற்று. தனியிருப்பவர் - தம் கணவரைப் பிரிந்து தனித்திருப்பவர். கெட்டேன்: இரக்கக் குறிப்பு. சிவபெருமான் தன் நெஞ்சில் இருப்பவும் தன்னைச் சந்திரன் வருத்துஞ் செயலை அநீதியென்றாள். சந்திரனது செயலை ஊரின்மேல் ஏற்றிக் கூறினாள். (பி-ம்.) ‘இருப்ப வொண்ணாது.’ இரு கனி - உமாதேவியாரும் கங்கையும். கடம்பவனமென்றதற்கேற்பக் கனியென்பதற்குப்பழம் என்னும் ஒரு பொருள் தொனிக்கின்றது. கண்புகுந்து - கண்வழியே புகுந்து; “கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” (கம்ப, மிதிலைக். 55) பிறைக் கூற்றம்: “இளம்பிறைக் கீற்றொன்று” (109.) முற்றி - சூழ்ந்து. உண்பது உண்ணாநின்றது.
சிவபெருமான் தன் மனத்துள் இருப்பதனால் தலைவரோடு சேர்ந்து இருப்பவர்களில் ஒருத்தியாக எண்ணுதற்குரிய தன்னைத் தனித்திருப்பவரைத் துன்புறுதுவதுபோலப் பிறை துன்புறுத்தியதென்றாள். தலைவனோடு சேர்ந்திருக்கும் தன்னையே பிறை வருத்தும்போது தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் மடவார் என்ன துன்பத்துக்கு ஆளாவரென்று இரங்கினாள்.
இது காமமிக்க கழிபடர் கிளவி வகையுள் ஒன்று. இதனைச் சந்திரோ பாலம்பனம் என்பர்.
114. செவிலி கூற்று: சொக்கப் பெருமான் மாலை தாராமையல் தலைவி வருந்தினாளென்று கூறுகின்றாள்.
உண் அமுதம் - உண்ணுகின்ற உணவு. என் பெண்ணமுதம். (109) (பி-ம்.) ‘பெண்ணமுதும்.’ சொக்கருக்கு உணவு நஞ்சு; அஃது இயல்பாகவே நஞ்சுதான்.என் பெண்ணாகிய அமுதம் வெறுக்கத் தகும் நஞ்சாகுமோ வென்றபடி; நஞ்சென்றது வெறுக்கப்படும் பொருளென்னும்
|