சந்தம் 115. | வரியளி பொதுளிய விதழியொ டமரர் | | மடந்தையர் நீல வனம்புக் கிருந்தன | | மதியக டுடைபட நெடுமுக ட்டைய | | நிமிர்ந்தபொன் மேரு வணங்க்ப் பொலிந்தன | | மழகதிர் வெணில்விட வொளிவிடு சுடர்வ | | லயங்கொடு லோக மடங்கச் சுமந்தன | | மதுகையொ ட்டுதிறன் முறைமுறை துதிசெய் | | தணங்கவ ராடு துணங்கைக் கிணங்கின |
| பொருசம ரிடையெதிர் பிளிறுமொர் களிறு | | பிளந்தொரு போர்வை புறஞ்சுற் றிநின்றன | | புகையெழ வழலுமிழ் சுழல்விழி யுழுவை | | வழங்குமொ ராடை மருங்குற் கணிந்தன |
குறிப்பை யுடையது. இதழி - கொன்றை மலர்மாலை. இந்தா - இதோ பெற்றுக்கொள்; “இந்தாவிஃதோ ரிளங்குழவி யென்றெடுத்துச், சிந்தா குலந்தீரத் தேவி கையி நீந்தனனே’ (கந்த. ஏள்ளியம்மை. 35); இச்சொல் ஈதா என்பதன் மரூஉ (பரி.8:60, பரிமேல்.) நிலம் மேவு - விரபதாபத்தால் உயிர் நீங்காமல் நெடுங்காலம் இவ்வுலகத்தில் விரும்பியிரு. எனச் சொலார் - என்று சொக்கநாதர் கூறார். ‘இந்தா நிலமேயெனச் சொலீர்’ என்ற பாடத்திற்குத் தோழிகள் கூறுவதைக் கொண்டு கூறியதாகக் கொள்க; இதற்கு, நில் அம்மேயென்று பிரித்துப் பொருள் கொள்க. மந்தாநிலம் - தென்றற் காற்று.
115. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தனதன தனன தனந் தனதான தனந்தத் தனந்தன.
(அடி, 1) வரியளி - வரிகளையுடைய வண்டுகள். இதழி - கொன்றை. நீலவனம் - மகளிர் கண்களாகிய கருங்குவளை மலர்களின் தொகுதி. மதியின் வயிறு கிழியும்படி நீண்ட வானத்தின் உச்சியளவும் உயர்ந்த மேருமலை. அடைய - முழுதும். மேரு வணங்கப் பொலிதலாவது அம்மலையை வளைத்து விளங்குதல். மழகதிர் - இளைய கிரணம். சுடர் வலயம் - சுடர் வீசும் தோள்வளை. இறைவன் உலகைக் பாதுகாக்கும் செயலை லோக மடங்கச் சும்பபதாக்க் குறித்தனர். மதுகை - வலி. திறலைத் துதிசெய்து. அணங்கவர் - பேய் மகளிர். துணங்கை - ஒருவகைக் கூத்து; இங்கே, போர்க்களத்தே பேய்கள் வெற்றிபெற்ற வீரனை வாழ்த்தியாடுங் கூத்து (முருகு. 51 - 6.)
(2) களிறு - தாருகாவன முனிவர் விட்ட யானை. போர்வை - யானைத் தோலாகிய போர்வையை. உழுவை - தாருகாவன முனிவர் விட்ட புலி.
|