பக்கம் எண் :

126குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

புலவெயி றயிறரு குருதியொ டுலவு
   மடங்களின் வீர மொடுங்கத் துரந்தன
புகலியர் குரிசில்ப ணொடுதமி ழருமை
   அறிந்தொரு தாளம் வழங்கப் புகுந்தன

உருமிடி யெனவெடி படவெதிர் கறுவி
    நடந்தொரு பாண னொதுங்கத் திரிந்தன
  உருகிய மனமொடு தழுவியொர் கிழவி
    கருந்துணி மேலி டுவெண்பிட் டுகந்தன
  உறுதியொ டவண்மனை புகும்வகை கடிது
    சுமந்தொரு கூடை மணுந்திச் சொரிந்தன
  உருவிய சுரிகையொ டெதிர்வரு செழியர்
    பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன

தருசுவை யமுதெழ மதுரம தொழுகு
    பசுந்தமிழ் மாலை நிரம்பப் புனைந்தன
  தளிரியன் மலைமகள் வரிவளை முழுகு
    தழும்பழ காக வழுந்தக் குழைந்தன
  தளர்நடை யிடுமிள மதலையின் மழலை
    த்தும்பிய வூற லசும்பக் கசிந்தன
  தமிழ்மது ரையிலொரு குமரியை மருவு
     சவுந்தர மாறர் தடம்பொற் புயங்களே.        
(12)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கல் - புலால் நாற்றம் வீசும் பற்களில்தான் உண்ட இரத்தத்தோடு உலாவுகின்ற நரசிங்கம். வீரமொடுங்கத் துரந்தன வென்றது சரபாவதாரமெடுத்து நரசிங்கத்தின் வலியழித்ததைக் குறித்தவாறு. (பி-ம்.) ‘ஒடுங்க்த் தொடர்தன’. புகலியர் குரிசில் - திருஞான சம்பந்தர். அவருக்குத் தாளம் வழங்கியது திருக்கோலக்காவென்னும் தலத்தில்.

    (3) வெடி - ஓசை. கறுவி - கோபித்து. நடந்த ஒரு பாணன் - நடந்து வந்து பாணனாகிய ஏமநாதனென்பவன். ஒதுங்க - ஓட. இது பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று சாதாரிபாடி ஏமநாதனென்னும் பாணன் தானே ஓடும்படிசெய்த திருவிளையாடலைக் குறித்தது. ஓர் கிழவி - செம்மனச் செல்வி. மனை - அடைப்பதறைகாக வரையறுத்த இடம். உந்தி - நுனிக்காலை ஊன்றி நின்று. (பி-ம்.) ‘மண் முந்திர்ச்’. சுரிகை - உடைவாள்.

    (4) மதுரம் - இனிமை. வளைமுழுகு தழும்பு - வளைத்தழும்பு; இவ்வரலாறு காஞ்சிப் புராணத்துள்ள தழுவக் குழைந்த படலத்தால் விளங்கும். இளமதலை - முருகக் கடவுள். ஊறல் - வாய்நீர் (205, 312, 401, 600.) (பி-ம்.) ‘கனிந்தன’. குமரி - தடாதகைப் பிராட்டியார்.