கட்டளைக் கலித்துறை 116. | புயல்வண்ண மொய்குழல் பொன்வண்ணம் | | தன்வண்ணம் போர்த்தடங்கண் | | கயல்வண்ண மென்வண்ண மின்வண்ண | | மேயிடை கன்னற்செந்நெல் | | வயல்வண்ணப் பண்ணை மதுரைப் | | பிரான்வெற்பில் வஞ்சியன்னாள் | | இயல்வண்ண மிவ்வண்ண மென்னெஞ்ச | | |
கலித்தாழிசை 117. | இருவருக்குங் காண்பரிய வீசர்மது ரேசனார் | | விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனர்கா ணம்மானை | | விருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனரே யாமாகில |
116. தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயலிடங் கூறல். மொய்குழல் புயல்வண்ணம். தன்வண்ணம் பொன் வண்ணம் - தலைவியின் நிறம் பொன்வண்ணம்; “பொன்னேர் மேனி” (குறுந். 319.) கண் கயல்வண்ணம். மின்வண்ணம் ஏய் இடை என் வண்ணம்; ஏய்தல் - ஒத்தல்; இடை தன்னைப்போல மெலிந்துள்ளதென்பான் இங்ஙனம் கூறினான். என் வண்ணமும் மின் வண்ணமுமே இடை எனினும் ஆம். கன்னறை செந்நெல் - கரும்பைப்போன்ற செந்நெற்பயிர்; “கரும்புற்ற செந்நெல் வயற்கமலேசர்” (342), “கன்னல்கொல் கமுகு கொ லென வளருஞ் சாலி” (375); “கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்ன” (பெரிய. நாட்டு. 15) பண்ணை - இங்கே மருதநிலம். இயல் - இயற்கையழகு. இரும்பொழிலே என் நெஞ்சம்; தலைவி பொழிலில் இருக்கின்றாளென்றபடி.
117. மூன்றுமகளிர் தம்முள் வாதஞ்செய்து அம்மானை யாடுவதைக் கூறுவது இது. இதில் முதலிரண்டடியும், அடுத்த இரண்டடியும், ஈற்றடியும் தனித்தனியே ஒவ்வொருத்தி கூற்று.
இருவர் - பிரமதேவரும் திருமாலும். (பி-ம்.) ‘மதுரேசர்’. விருதுகட்டி - வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து. அங்கம் வெட்டி - சித்தனென்பவனுட்ய அங்கத்தை வெட்டி; அங்கம் வெட்டுதல்: யுத்தபரிபாஷைகளுள்
|