பக்கம் எண் :

128குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அருமையுடம் பொன்றிருகூ றாவதே னம்மானை
     ஆனாலுங்காயமிலையையரவர்க்கம்மானை.    
(14)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசரிய விருத்தம்
118.
அம்ம கோவெனும் விழுமழு மெழுந்துநின்
     றருவிநீர் விழிசோர
விம்மு மேங்குமெய் வெயர்த்துவெய் துயிர்க்குமென்
     மெல்லிய லிவட்கம்மா
வம்மின் மாதரீர் மதுரையுங் குமரியும்
     மணந்தவர் மலர்த்தாமம்
தம்மி னோவெனுந் தவப்பயன் பெரிதெனும்
     தந்தைதா ளெறிந்தார்க்கே.    
(15)

ஒன்று (திருவால. 35 :14.) இருகூறு - இரண்டு துண்டம்; இறைவன் கூறும், அம்பிகையின் கூறும்; அர்த்த நாரீசுவர வடிவத்தைக்குறித்தபடி; “ஒன்றே யுடம்பங் கிரண்டே யிடும்பங்கு” (110,) காயம் - புண், உருவத் திருமேனி; சிலேடை.

    தோற்றவருக்கு அல்லாமல் வென்றவருக்கு உடம்பு இரு கூறாதற்குக் காரணமில்லை யென்றபடி.

    சிவபத்திச் செல்வம் வாய்ந்தவரும் ஆயுதக்கலைகளைக் கற்பித்து வந்தவருமான தன் ஆசிரியர்பால், அவருடைய மாணாக்கனான சித்தனென்பவன் பொறாமை கொண்டு, தானும் ஒரு கருடிக்கூடம் உண்டாக்கிச் சிலருக்குக் கற்பித்து அவருடைய வருவாயைக் குறைத்தற்கு முயன்று வேறு தீங்கும் இழைத்தபொழுது கருணையங்கடலாகிய சோமசுந்தரக் கடவுள் அந்த ஆசிரியரது வடிவங்கொண்டு அவனைப் போருக்கு அழைத்து அவனுடைய அங்கங்களை வெட்டி வென்றாரென்பது இங்கே குறிக்கப்பட்ட வரலாறு. இச்செய்தி அங்கம் வெட்டின படலத்தால் அறியப்படும்.

    118. சொக்கநாதருடைய மாலையைப் பெற விரும்பிய தன் மகளின் நிலையாக் குறித்துத் தோழிமாரை நோக்கிச் செவிலி இரங்கிக் கூறியது இச்செய்யுள்.

    (பி-ம்.) ‘விழிசோரும்’. என் மெல்லியல் அம்மகோ என்னும் - என்மகள் அம்மேயோ வென்பாள். பின்வரும் முற்றுக்களுக்கும் இங்ஙனமே பொருள் கொள்க. மாதரீரென்றது தோழிமார்களை. மணந்தவர் - கலந்தவர். தாமம் - கொன்றை மாலையை. தம்மின் - தாரும். இவட்கு மலர்த்தாம்ம் தம்மின். ஓ எனும் - ஓ வென்று கதறுவாள். தந்தைதாள் எறிந்தார் - சண்டேச நாயனார். தவப்பயன் பெரிதென்றது கொன்றை மாலையை அவர் எளிதிற பெற்றமைபற்றி (542, 639); “பெற்றவர்தாள், வீசுமழுவாற்றுணிய வெட்டுமவர்க் கல்லாது, வாசமலர்க் கொன்றை வழங்கீரோ” (ஏகாம்பர. உலா, 401 -2.)