அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 197. | அடுத்தங் குலவாக் கோட்டைசுமந் | | தளித்தீ ரொருவற் கதுநிற்கத் | | தொடுக்குங் கணைவே டனக்குலவாத் | | தூணி கொடுத்தீர் போலுமால் | | எடுக்குங் கணையைந் தெய்தகணை | | எண்ணத் தொலையா வென்செய்கேன் | | திடுக்கங் கொளமால் சிலைமதனைச் | | சினத்தீர் கடம்ப வனத்தீரே. |
எழுசீர்ச் சந்தவிருத்தம் 198. | கடமுடையு நறுநெய்க்குண் முழுகியெழு வதையொத்த | | கரடமத கரிபெற்றொர் பிடியேபோல் | | மடவநடை பயில்பச்சை மயிலைபொரு புறம்வைத்த | | மதுரையழ கியசொக்கர் வரைவேலோய் |
197. தலைவி கூற்று.
உலவாக் கோட்டை - எடுக்க எடுக்கக் குறையாத நெற் கோட்டையை. ஒருவற்கு - அடியார்க்கு நல்லாரென்னும் இரு வேளாளருக்கு. உலவாக் கோட்டையருளிய திருவிளையாதற் செய்தி இது. கணைவேள் - அம்பையுடைய மன்மதன். உலவாத் தூணி - எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத் தூணி; தூணியென்பதற்கு நான்கு மரக்காலென்று வேறொரு பொருள் தோற்றியது. எடுக்கும் கணை ஐந்தானாலும் எய்த கணையோ எண்ணத் தோலையா; ஆதலின் அவனுக்கு உலவாத் தூணியொன்று இருக்குமென்றும் அது தேவரீராற் கொடுக்கப்பட்டதென்றும் தோற்றுகின்றதென்றாள். மால் திடுக்கங்கொள - திருமால் நடுக்கத்தை யடைய; திடுக்கங்கொளல் - திடுக்கிடல். மதன் தன் பிள்ளையாதலின் திடுக்கிட்டார். சினந்தீரென்றது வனத்தீரே என்ற எதுகைக்கேற்ப வலித்தல் விகாரம பெற்றது. நீர் காமனைச் சினந்தும் பயனில்லையென்பது குறிப்பு.
198.(சந்தக் குழிப்பு.)தனதனன தனனத்த தனதனன தனனத்த தனதனன தனனத்த தனதானா.
இது தலைவன் மடலேறுவேனென்றபொழுது தலைவியின் அவயவங்களைப் படத்தில் எழுதுதல் அரிதெனக் கூறித் தோழி தடுத்தது. இத்துறை எழுதரிதென்ன ஏந்தலை விலக்கலெனவும் வழங்கும்.
கடம் - குடம். கரடம் - மதச்சுவடு. கரி - விநாயகர். மடவநடை பயில் மயில்: 4. மடலேறத் துணிந்த தலைவன் தலைவியின் படத்தை எழுதிக் கைக் கொண்டு வருவதாகக் கூறினமையின் தோழி இது கூறினாள். நடை
|