பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்171

நடையுமெழு துவைநிற்கு நிலையுமெழு துவைசொற்குள்
    நலமுமெழு துவைசித்ர ரதிபோல்வாள்
இடையுமெழு துவைமுற்று மிலதொர்பொரு ளையுமொக்க
    எழுதிலெவ ருனையொத்த பெயர்தாமே.        
(95)

        அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
199.
மேதகைய பலகலைபோர்த் தறம்வளருத் தமிழ்க்கூடல்
   விகிர்த கேண்மோ
ஏதமினின் றிருவுருவொன் றீருருவாய் நின்றதினும்
   இறும்பூ தந்தோ
போதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத் தொருவனிரு
   பூவை மார்க்குக்
காதலனாய் மற்றுனக்கோர் காதலியாய் நிற்பதொரு
   காட்சி தானே.    
(96)

நேரிசை வெண்பா
200.
காண்டகைய செல்வக் கடம்பவனத் தானந்த
தாண்டவஞ்செய் தாண்டவர்நீர் தாமன்றே - பூண்டடியர்

தலைவியின் நடை. முழுதும் இல்லாத்தொரு பொருளை எழுதும் வல்லமை உனக்கு உளதானால் இவள் நடை முதலியவற்றை எழுத இயலும் என்றாள்; அவை எழுத்தற்கு அரியனவென்பது கருத்து. எழுதின், எழுதுவையென இயைக்க.

    199. பல கலை - போர்த்து - பலவகைக் கலைகளை உடையதாகி.. போர்த்து என்ற சொற்கிடக்கையால் கலையென்பதற்கு ஆடையென்று ஒரு பொருள் தொனித்தது: “பலகலையும் பொதி மதுரை” (204) என்பர். பின். மதுரையிற் பல கலையிருத்தல்: விகிர்த - வேறுபாடுதையோய்: இது பின் கூறும் செய்திகளுக்கேற்ப அமைந்த விளி. அர்த்த நாரீசுவர வடிவத்தையே திருவுரு வொன்று ஈருருவாய் நின்றதென்றார் (534.) இறும்பூது - ஆச்சரியம். அந்தோ; (வியப்பின்கட்குறிப்பு; ‘ஐயோவென்பது உவகைக்கண் வந்தது’ (திருச்சிற், 384, பேர்.) என்பதுபோல. புயல் வண்ணத்தொருவன் - திருமால். இரு பூவைமார் - திருமகளும்