| உள்ளத் திருப்பீரெம் முள்ளத்தை யும்மமதா | | |
கட்டளைக் கலித்துறை 201. | மிக்கார் முகத்தருள் கூடற் பிரான்விட நாண்டுவக்காக் | | கைக்கார் முகத்தன்ன தேர்வல வாகை பரந்துசெலும் | | இக்கார் முக்கக வெழுந்தகொல் லாமெம தாவியென்னத் | | தக்கார் முகத்தடங் கண்ணீ ருகாந்த சலதியையே. |
எழுசீர்ச் சந்தவிருத்தம் 202. | சலராசி தங்கு கணையேவு மொய்ம்பர் சரணார விந்த மிசையே | | மலராகி டதம நயனார விந்தர் மதுரேசர் முன்பு புகலார் | | சிலராவி யின்றி யுடலேசு மந்து திரிவார்கள் வெந்து விழவே | | புலராத கங்கு லிடையேயொ ரங்கி புகையாது நின்றெ ரிவதே. |
நிலமகளும். காதலி - மனைவி. திருமாலைச் சிவபெருமானுக்குரிய சக்தியாக்க் கூறுதல் மரபு; “அரியலாற் றேவி யில்லை யையனை யாற னார்க்கே” (தே, திருநா.)
200. ஆனந்த தாண்டவம் - பதஞ்சலி முனிவருக்காகச் செய்தருளிய சொக்கத் தாண்டவம் (திருவால. 5 : 5.) செய்து ஆண்டவர். பூண்டு - அன்பு பூண்டு உள்ளத்து இருப்பீர். மெள்ளத் திருப்புவீராக; “பாச நெஞ்சை, மடைமாறி யுன்றன் டிருவடிக் கேவர வைத்தருளே” (திருவரங்கத்துமாலை, 108.)
201. வினைமுற்று மீளும் தலைமகன் இடைச்சுரத்தில் தேர்ப்பாகனோடு கூறியது.
மிக்கார் முகத்து - அறிவின் மிக்கார் திறத்தில். பிரானத் கார்முகம். விடநாண் துவக்கா - விடத்தையுடைய பாம்பாகிய நாணால் கட்டப்படாத. கைக் கார்முகம் - கையிலுள்ள வில்; மேருமலை; இது தேருக்கு உவமை. வலவா - பாகனே. கை பரந்து - பக்கத்திற் பரவி. இ கார் - இந்த மேகங்கள்; எழுவாய். எமது ஆவியென்னத் தக்காரென்றது தலைவியை. முகத்திலுள்ள பெரிய கண்களிலிருந்து வரும் நீராகிய யுகாந்தகாலத்து கடலை. சலதியை முகக்க எழுந்தகொல்லாம்; எழுந்தகொல்லாம் - எழுந்தன போலும். என்னுடைய பிரிவினால் வருந்தும் தலைவி இம்மேகங்களைக் காணின் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வரவில்லை யென்றெண்ணி மிக அழுவாளென்பது கருத்து. நீ விரைவாகத் தேரைச் செலுத்துகவென்பது எச்சம்.
202. (சந்தக் குழிப்பு.) தனதான தந்த தனதான தந்த தனதான தந்த தனனா.
|