*பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 203. | தேன்வ ழங்குக டுக்கை யார்கரு | | மான்வ ழங்குமு டுக்கையார் | | திருவி ருந்தவி டத்தி னார்ருள் | | கருவி ருந்தந டத்தினார் | | மான டங்கிய வங்கை யார்சடைக் | | கான டங்கிய கங்கையார் | | வைகை யொன்றிய கூட லாரிவள் | | செய்கை யொன்றையு நாடலார் | | கான வேயிசை கொல்லு மாலுற | | வான வாய்வசை சொல்லுமால் | | கன்றி யன்றிலி ரங்கு மாலுயிர் | | தின்று தென்றனெ ருங்குமால் | | தீநி லாவனல் சிந்து மாற்கொல | | வேனி லான்மெல முந்துமால் | | தினமி டைந்திடை நொந்த போன்மகண் | | |
தலைவி கூற்று. யாரேனும் தலைவரிடம் தூது போதல் வேண்டுமென்று புலப்படுத்துகின்றாள்.
சலராசி தங்கு கணை - பாற்கடலில் தங்கும் திருமாலாகிய அம்பு. மொய்ம்பர் - வலியையுடையவர். சரணார விந்தமிசையே மலராகிடு அந்த நயனாரவிந்தர் - திருவடியின்கண் மலராக அமைந்த அந்தத் திருமாலின் விழியையுடையவர். (பி-ம்.) ‘நயனாரவிந்த மதுரேசர்’. திரிவார்களாகிய சிலர். ஓர் அங்கியென்றது சந்திரனை (189); “வீங்கா நின்ற கருநெருப்பினிடையே யெழுந்த வெண்ணெருப்பே” (கம்ப. மிதிலைக். 76.)
203. (பி-ம்.) *சந்தத் தாழிசை.
தோழிகூற்று; செவிலி கூற்றுமாம்.
கடுக்கையர் - கொன்றைமாலையை அணிந்தவர். கருமான் - யானை. உடுக்கை - உடை; இங்கே போர்வை. திரு - உமாதேவியார்; “அறந்தந்த பொன்”, “மின்னுழை மருங்குற் பொன்” (120, 206) என்றும் கூறுதல் காண்க. இடத்தினார் - இடப்பாகத்தை உடையவர். நடம் - சொக்கத் தாண்டவம். சிவபெருமான் ஆன்மாக்களை உய்யக்கொள்ளும் பொருட்டுப் பஞ்ச கிருத்திய நடனம் புரிதலின், அருள் கருவிருந்த நடத்தினாரென்றாள். மான் - மான்கன்று. சடைக்கான் - சடையாகிய காட்டில். கூடலார் - மதுரையை யுடையவர். இவளென்றது தலைவியை. கானவேயின் இசை; வேய் - வேய்ங்குழல். உறவான ஆய் - அன்புடைய நற்றாய்; உறவான வாயெனப் பிரித்து, நட்புடையோர் வாய்களென்று பொருள் கொள்ளுதலும்
|