பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்175

வெள்ளிவெண் ணிலவு விரிந்தகோ டீரம்
    வெஞ்சுடர்க் கடவுளுங் கிடைத்து
  வீற்றிருந் தனைய விடுசுடர் மகுட
    மீக்கொளூஉத் தாக்கணங் கனையார்
கள்ளவாட் கருங்கண் ணேறுகாத் திட்ட
    காப்பென வேப்பலர் மிலைச்சும்
  கைதவக் களிறே செய்தவக் கூடற்
    கண்ணுதற் கடவுண்மா மணியே.        
(102)

நேரிசை யாசிரியப்பா
206.
      கட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு
      மனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து
      செந்நா முற்றத்து நன்னடம் புரியும்
      பல்வேறு வன்னத் தொருபரி யுகைத்தோய்

    (2) (பி-ம்.) ‘எடுத்து மோந்து’. அணைத்து ஆங்கு. வாய்த்தீருக்கு - பெற்றவர்களாகிய உங்களுக்கு. இரு தலைக் காமம் - பட்சபாதம். உற்றவா - உண்டானவிதம். உலகமெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகத்திலுள்ளோர் யாவரும் பிள்ளைகளாயிருப்பவும், முருகக் கடவுளைமட்டும் மடியிலிருத்திப் பாராட்டுதல் பட்சபாதமன்றோ வென்றார் (670,) சிவபெருமானும் உமாதேவியாரும் முருகக் கடவுளைப் பாராட்டுதல்: 312, 449, 690.

    (3) வெள்ளி வெண்ணிலவு - மிக்க வெண்மையையுடைய நிலவு; “வெள்ளி வெண்கடல்” (கம்ப. வீடண. 133.) கோடீரம் - சடையை. வெஞ்சுடர்க்கடவுளும் - சூரியனும். கிடைத்து - அணுகி. மகுடத்திற்குச் சூரியன் உவமை: “திருமுகத் திருக்கண் ணாகிச் சேர்ந்துரை நம்மு ணீயே, சுருதி சொ லெகினங் காணாச் சுடர் முடியுற்று வாழ்ந்தாய், ஒருவற வினியான் வாழ்வ லென்றொரு மதியைத் தள்ளி, மருவுசெங் கதிருற் றென்ன மாணிக்க மகுடஞ்சூடி” (தியாகராச. 3 : 12) மகுடத்தின்மேலே. தாக்கணங் கனையார் - தீண்டி வருத்தும் தெய்வத்தைப் போன்ற மகளிர்.

    (4) கண்ணேறு - திருஷ்டி தோஷம். வேப்பலர் - வேம்பினது பூவை. கண்ணேறு படாதபடி வேம்பின் பூவைச் சூடுதல் வழக்கம். கைதவக் களிறு - பாண்டியர்களுள் ஆண்யானை போன்றவர்; கைதவன் - பாண்டியன்.

    206. (அடி. 1-4) கட்புலம் கதுவாது - கண்ணாற் பார்த்தற்கு இயலாமல்; வேதம் எழுதாக்கிளவியென்பதை விளக்கியபடி. செவிப்புலம் புக்கு - கேள்வியளவாக நின்று; சுருதி யென்னும் பெயர்ப்பொருளை உணர்த்தியபடி. மன்னிடைத் துஞ்சி - மனத்தில் நிலைபெற்று; “மனவட்ட மிடுஞ் சுருதி வயப்பர்” (105) என்றார். முன்னும். வன்னம் - எழுத்து; ணிறமென்பது வேறு பொருள். ஒரு பரி - வேதமாகிய குதிரை.