5 | புட்கொடி யெடுத்தொரு பூங்கொடி தன்னொடு | | மட்கொடி தாழ்ந்த வான்கொடி யுயர்த்தோய் | | ஓரே ழாழி சீர்பெறப் பூண்டு | | முடவுப் படத்த கடிகையுட் கிடந்து | | நெடுநிலை பெயரா நிலைத்தே ரூர்ந்தோய் | 10 | மீனவர் பெருமான் மானவேல் பிழைத்தாங் | | கெழுபெருங் கடலு மொருவழிக் கிடந்தென | | விண்ணின் றிறங்குபு விரிதிரை மேய்ந்த | | கொண்மூக் குழும்பு கொலைமதக் களிற்றொடும் | | வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்தாங் | 15 | காற்றல்கொ டுற்றபா கலைத்தனர் பற்றத் | | திரியமற் றெம்மைத் தீச்சிறை படுக்கெனப் | | பருதிவே லுழவன் பணித்தன்ன் கொல்லென | | மெய்விதிர்த் தலறுபு வெரீஓப்பெயர்ந் தம்ம | | பெய்முறை வாரிப் பெரும்பெய வல்ல | 20 | நெய்பா றயிர்முதற் பல்பெய றலைஇப் |
(5-6) புட்கொடி - கருடக்கொடி. பூங்கொடி - திருமகள். மட்கொடி - நிலமகள். தாழ்ந்த - தன்பால் தங்கப்பெற்ற. வான் கொடி - திருமாலாகிய பெருமையையுடைய கொடியை; புட்கொடியைக் கொண்டு பொறிக் கொடிமார் பிற்கொண்மரைக், கட்கொடி” (திருவிடை. உலா, 143.)
(7-9) ஆழி - கடல்; சக்கரமென்பது வேறு பொருள். சுடிகை - முடி. முடவுப்படத்த சுடிகை - ஆதிசேடனது முடி. நிலைத்தேர் - பூமியாகிய ஓடாத தேர். ஏழு சக்கரங்களைப் பெற்றும் ஓடாத நிலைத்தேரை ஊர்ந்தோயென்று பொருள் படுவது ஒரு நயம்.
(10-21) மீனவர் பெருமான் - உக்கிரகுமாரபாண்டியர். பிழைத்து - தப்பி. கிடந்தன - கிடந்தனவென்று கருதி. கடல் சுவற வேல் விட்ட உக்கிரகுமார பாண்டியருடைய வேலுக்குத் தப்பி ஏழு கடல்களும் ஓரிடத்திற் கிடந்தனவென்று கருதி; விரிதிரை - விரிந்த திரையையுடைய அகழி. கொண்மூக் குழும்பு- மேகக் கூட்டம்; குழும்பு - கூட்டம்; “களிற்றுக் குழும்பு” (மதுரைக். 24) (பி-ம்.) ‘கொண்மூக் குறும்பு’, ‘கொண்மூக் குழுமலைக்’. யானைப் பாகர் நீருண்ண வந்த மேகங்களை யானை யென்றெண்ணி மின்னலைக் கொண்டு கட்டினர் (340.) பாகு - பாகர். திரிய - மீண்டும் (335.) (பி-ம்.) ‘திரியும்’. மற்று: அசைநிலை. தீச்சிறை - மிக்க துன்பத்தைத் தரும் சிறையில். பருதி வேலுழவன் - உக்கிர குமார பாண்டியர். விதிர்த்து - நடுங்கி. தம்மைப் பாகர் பிடித்த காலத்தில், முன் தம்மைத் தளை செய்த பாண்டியன் மீட்டும் இவர்களை விட்டுச் சிறைசெய்வித்தான் போலும் என்று அஞ்சி அவன் சினம் மாற வேண்டுமென்று கருதி நீரைச் சொரிதலோடு நெய் பால் தயிர் முதலி
|