பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்177

பெருவளஞ் சுரந்த விரிதமிழ்க் கூடல்
இருநில மடந்தைக் கொருமுடி கவித்தாங்
கிந்திர னமைத்த சுந்தர விமானத்
தருள்சூற் கொண்ட வரியிளங் கயற்கண்
25
மின்னுழை மருங்குற் பொன்னொடும் பொலிந்தோய்
துரியங் கடத துவாத சாந்தப்
பெருவெளி வளாகத் தொருபெருங் கோயிலுள்
முளையின்று முளைத்த மூல லிங்கத்
தளவையி னளவா வானந்த மாக்கடல்
30
நின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென
மன்பெருஞ் சிறப்பின் மதிநலங் கொளினே
பேதைமைப் பாலரே பெரிது மாதோ
வேத புருடனும் விராட்புருடனுமே
இனையநின் றன்மைமற் றெம்ம னோரும்
35
நினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின்
வாழிய பெருமநின் றகவே
வாழியெம் மனனு மணிநா வும்மே.    
(103)

மதுரைக் கலம்பகம் முற்றிற்று.


    யவற்றையும் பெய்தன. வாரி - நீர். (பி-ம்.) ‘பெயும் பெயல்’. பல் பெயல் தலைஇ - பல மழையைப் பெய்து.

    (22-5) இந்திர விமானம் நிலமகளின் முடிபோல் விளங்குகின்றது. நுழை மருங்குல் - நுண்ணிய இடை. பொன் : 120.

    (26-9) வளாகம் - பரப்பு. மூல்லிங்கம் : 140. அளவை - பிரமாணம் (600.) கடல் - விளி. கடலாகிய நின் (30) என்று கூட்டுதலும் ஆம்.

    (30-33) மன் பெருஞ் சிறப்பின் - தம்பால் நிலைபெற்ற பெரிய சிறப்பினால். (பி-ம்.) ‘சிறப்பிற்றம்’. வேதபுருடனும் விராட்புருடனும் பேதைமைப் பாலர்; அவர்களால் நின் தன்மை நிகழ்த்துதற்கு அரிதென்றபடி; 466.

    (34-7) புரிதலின் - விரும்பி அருள் செய்தலின். (பி-ம்.) ‘வாழியெம்பெரும’. தகவு - தகுதி; சிறப்பு. வேதபுருடன் முதலியோருக்கும் சொல்லுதற்கு அரிய நின் பெருமையை எம்மனோர் பாடுவது எம் ஆற்றலால் அன்று; நின் தகவினால் அமைந்தது அது; ஆதலின் நின் தகவு வாழ்க. நின் பெருமையை நினைத்தற்குக் கருவியாகிய மனமும் பாடுதற்குக் கருவியாகிய நாவும் வாழி; “வாழியவன் சீர்பாடும் வாய்” (490.)