நீதிநெறி விளக்கம்
| *நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம் | | நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் | | எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே | | வழுத்தாத தெம்பிரான் மன்று. |
207. | அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும் | | புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன் | | றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை | | |
*இச்செய்யுள் இந்நூலாசிரியரால் இயற்றப்பெற்ற சிதம்பரச் செய்யுட் கோவையிலும் சேர்க்கப் பெற்றிருக்கின்றது; 489.
இதன்பால் இளமை, செல்வம், யாக்கை யென்பவற்றின் நிலையாமை கூறப்படும்.
நீரிற் குமிழி நிலையாமைக்கு உவமை; “படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக், கெடுமிதோர் யாக்கை” (நாலடி. 27.) நீரில் எழுத்தாகும் யாக்கை: “நீரெழுத்துக் கொத்தவுடல்” (600.) நமரங்காள் - நம்மவர்களே; அம் ; சாரியை (506, 520, 563.) எம்பிரானது மன்றை: மன்று - சிற்றம்பலம்.
எல்லாரும் எளிதில் அறியும் பொருட்டு. இளமை முதலியவற்றிற்கு நீரில் தோன்றுவனவாகிய குமிழி முதலிய ஓரினப் பொருள்களையே உவமை கூறியது அறியத்தக்கது; இதனை மரபுவமையென்பர் மாறனலங்கார முடையார் (சூ. 105)
207. இதுமுதல் எட்டுச் செய்யுட்களால் கல்வியின் இயல்பு கூறப்படும்.
இச்செய்யுளிற் கல்வியின் பயன் கூறப்படும்.
வீட்டின் சிறப்பை நோக்கி ‘வீடும்’ என அதனைத் தனியே உம்மை கொடுத்துப் பிரித்துக் கூறினார். புறங்கடை - கடைப்புறம்; வாயிற்புறத்தில்; இஃது இலக்கணப் போலி (270.) (பி-ம்.) ‘நல்லிசையா’. கவல் உற்றுழி
|